மனைவி கொடுத்த முதல் பரிசு : வெளிப்படையாக பேசிய ரிஷப் ஷெட்டி

சினிமா

பொன்னியின் செல்வன் படம் இன்னும் பார்க்கவில்லை என்றால் நீ தமிழன் இல்லை’ என்பது கடந்த வாரம் வரை சாதாரணமாக பேசக் கூடிய உரையாடலாக இருந்தது.

சினிமா விழாக்களில் கூட இது போன்று நடிகர்களால் பேசப்பட்டது. அந்தளவிற்கு பொன்னியின் செல்வன் தாக்கம் தமிழகத்தில் இருந்தது.

பொன்னியின் செல்வன் வெளியான அதே நாளில் கன்னட மொழியில் கர்நாடகாவில் மட்டும் வெளியான காந்தாரா இரண்டாவது வாரத்தில் இந்தியசினிமா வட்டாரத்தில் தாக்கத்தையும், அதிர்வுகளையும் ஏற்படுத்தியது.

15 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்தப்படம் கன்னடத்தில் 100 கோடி வசூல் செய்த ஆறாவது படம் என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளது.

காந்தாரா தமிழில் கடந்த 15 அன்று வெளியான பின்பு தமிழ் சினிமா ரசிகர்களிடம் மட்டுமல்ல, வெகுஜன தளங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்திய படமாக மாறியுள்ளது.

சினிமா வட்டாரங்களில் பார்த்தே ஆக வேண்டிய படம் காந்தாரா என கூறப்படும் நிலைக்கு உயர்ந்துள்ளது.

காந்தாராா படத்தில் நடித்து இயக்கியுள்ள ரிஷப்ஷெட்டி கன்னட சினிமாவில் வெற்றிகரமான நடிகரோ, இயக்குநரோ  இல்லை.

கன்னடத்தில் பல படங்களில் நடித்தும்,  சில படங்களை இயக்கியும் இருக்கிறார்.

39 வயதான ரிஷப் ஷெட்டி  எம்.பி.ஏ படித்தவர். ஃபிலிம் டைரக்ஷ்னில் டிப்ளமோ வாங்கி இருக்கிறார். 2012-ல் சிறிய வேடத்தில் ‘துக்ளக்’ படத்தில் நடித்து, நடிகராக அறிமுகம் ஆனார்.

‘ யக்ஷ்சகானா ‘ என்ற கர்நாடக , Traditional dance folk-ல் நன்கு பயிற்சி பெற்றவர். இவர் நடித்து 2019-ல் வெளிவந்த ‘ பெல் பாட்டம் ‘வெற்றிபெற்றது. காந்தாரா படம் வெளியான பின்பு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நெருக்கமான, பரிட்சயமான நடிகராக மாறியுள்ளார் ரிஷப்ஷெட்டி.

Wifes First Gift Rishabh Shetty who spoke openly

அவரை பற்றிய தகவல்களை தேடிப் படிக்கும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

காரணம் பத்திரிகையாளர்களிடம் பேசுகிறபோது மிகைப்படுத்தல் இல்லாமல் நேரடியாக பதில்கூறுவது அதுவும் தமிழில் பேசுவது தமிழ் சினிமா ரசிகர்கள் விரும்பக்கூடியதாகவும் மாறி வருகிறது.

அவரது மனைவி அவருக்கு முதலில் அளித்த பரிசை தயக்கமின்றி பொதுவெளியிலும், பத்திரிகையாளர்களிடமும் பகிர்ந்து கொண்டபின் மேலும் மக்களிடம் நெருக்கமாகியுள்ளார்.

ரிஷப்ஷெட்டிஇவருக்கு திருமணம் ஆகி 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த ஆண்டு  குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது.

இவருடைய மனைவி பிரகதிக்கு முதல் பரிசாக கம்மல் வாங்கி கொடுத்துள்ளார்.

கணவருக்கு பிரகதி அளித்த முதல் பரிசு  OLD MONK RUM மதுபானம்.

இதனை வெளிப்படையாக அவர் கூறியது இளைஞர்களின் விருப்பத்துக்குரிய நாயகனாக ரிஷப்ஷெட்டியை மாற்றியுள்ளது.

இராமானுஜம்

பிக்பாஸ் வீட்டுக்கு வந்த சோதனை! கண்ணீர் விட்ட அசீம்

ஜெ.வுக்கு வெளிநாடு சிகிச்சை: தடையாக இருந்த சசிகலா, விஜயபாஸ்கர்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *