தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். நாளை அந்த கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடக்கவுள்ளது. மாநாட்டில் கலந்துகொள்வதற்கு விஜய்யின் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
கட்சியின் பாடலும், கொடியும் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டன. பாடலாசிரியர் விவேக் தவெக கட்சியின் பாடலை எழுத தமன் இசையமைத்துள்ளார். தவெகவுக்கு தேர்தல் ஆணையமும் அங்கீகாரம் கொடுத்துவிட்டது. எனவே 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக அரசியல் கட்சியாக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் நடிகை திரிஷாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது தவெக கொடி மாதிரியே இருக்கும் ஸ்பெயின் கொடியின் புகைப்படத்தை பகிர்ந்து கையில் முறுக்குடன், ‘தேன்குழல் இன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதனைப் பார்த்த ரசிகர்களோ விஜய்யின் அரசியல் கட்சிக்கு திரிஷா முழு ஆதரவு கொடுப்பார் என்று உறுதியாகிவிட்டது என்று கூறி வருகின்றனர்.
ஸ்பெயின் நாட்டில் அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திடீரென நடிகை த்ரிஷா அந்த படத்தின் படப்பிடிப்பில் இருந்து கிளம்பி சென்னைக்கு வந்துள்ளாராம். விஜய் கட்சியின் மாநாட்டில் பங்கேற்கவெல்லாம் அவர் வரவில்லை. நகைக்கடை விளம்பரம் ஒன்றில் நடிப்பதற்காக சென்னை வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விளம்பர படப்பிடிப்பு முடிந்ததும் திரிஷா மீண்டும் ஸ்பெயின் கிளம்பி செல்லவுள்ளதாக சொல்லப்படுகிறது.
த.வெ.க மாநாட்டில் திரிஷா பங்கேற்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள பொருளை இறக்க 25 ஆயிரம்… நோக்கு கூலியால் நாக்கு தள்ளிய காண்டிரக்டர்