ஷங்கர் இல்லாமல் நடக்கும் படப்பிடிப்பு: ஏன்?

சினிமா

தமிழ் சினிமாவில் மறைந்த இயக்குநர் இராமநாராயணன் ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கக்கூடியவர் என்பதுடன் ஒரே நாள் ஒரே நேரத்தில் இரண்டு படங்களின் படப்பிடிப்புகளையும் வெவ்வேறு ஸ்டுடியோக்கள், அரங்குகளில் நடத்தக்கூடியவர்.

காட்சிகள், வசனங்கள், நடிகர் நடிகைகளை முடிவு செய்து தனது உதவியாளர்கள் பொறுப்பில் அவர்களை இயக்குமாறு கூறிவிடுவார். அவ்வப்போது மேற்பார்வையிடுவதற்கு மட்டும் இராமநாராயணன் செல்வார் என கூறுவார்கள்.

குறிப்பிட்ட நாட்களில் படப்பிடிப்பை முடிக்க வேண்டும் என்பதற்காக இரண்டு படப்பிடிப்பு குழுக்கள் இரண்டு அசோசியேட் இயக்குநர்கள் தலைமையில் படப்பிடிப்பையும் நடத்துவார்.

படத்தின் இயக்குநர் மேற்பார்வையில் இது நடக்கும். ஆனால் ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் இந்தியன் – 2, தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் பெயரிடப்படாத இரண்டு படங்களும் ஷங்கர் இல்லாமலே படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதாம்.

என்ன காரணமாக இருக்கும் என விசாரித்தபோது…

“தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு முடித்து இந்தியன் 2 படப்பிடிப்பு, இந்தியன் 2 படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ராம்சரண் படப்பிடிப்பு என்று வேலைகள் நடைபெற்று வந்தது.

நடிகர்கள் தேதி உள்ளிட்ட சில விசயங்கள் காரணமாக ஒரே நேரத்தில் இரண்டு படங்களின் படப்பிடிப்பும் நடந்தாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

எப்போதும் அப்படியெல்லாம் ஒப்புக்கொள்ளாத இயக்குநர் ஷங்கர் இப்போது அதை ஒப்புக்கொண்டிருக்கிறார் என்பதே வியப்பான செய்தி” என்று கூறுகிறது இயக்குநர் வட்டாரம்.

இந்தியன் 2 படப்பிடிப்பை இயக்குநர் அறிவழகன் நடத்திக் கொண்டிருக்கிறாராம். ராம்சரண் படத்தில் பாடல்காட்சி படமாவதால் அதை நடன இயக்குநர் நடத்திக் கொண்டிருக்கிறாராம்.

இரண்டு படப்பிடிப்புகளிலுமே இயக்குநர் ஷங்கர் இல்லை என்பது யாரும் எதிர்பார்க்காதது.

அப்படி என்றால் ஷங்கர் என்ன செய்கிறார்? என கேட்டால், “இந்த இரண்டு படங்களை தொடர்ந்து அடுத்து அவர் இயக்கவிருக்கும் வேள்பாரி நாவலைத் தழுவிய படத்துக்காக எழுத்தாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசனுடன் திரைக்கதை விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறாராம்.

சு.வெங்கடேசன் பாராளுமன்ற உறுப்பினர் என்பதால் அவருக்கு நேரம் கிடைக்கும்போது ஷங்கர் இருந்தாக வேண்டிய நிலை. அதனால் ஷங்கர் தன்னை மாற்றிக்கொண்டார்” என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்.

இராமானுஜம்

”பவர் சீட்ல இருக்காது சார்”: வாரிசு டிரெய்லர்!

ரிஷப் பண்ட் மும்பைக்கு மாற்றம் : பிசிசிஐ

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *