கார்த்தி-தமன்னா நடிப்பில் வெளியான பையா திரைப்படம் இன்றுடன், 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன் படங்களில் அழுக்கு உடைகளுடன் நடித்த கார்த்தி பையா படத்தில் செம ரிச்சான லுக்கில் தோன்றி கவனம் ஈர்த்தார். கலர்புல்லான உடைகள், காதல், காமெடி, துள்ளல் பாட்டுகள் என ஒரு கமர்ஷியல் படத்திற்கு உண்டான அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் இருந்தன.
இதனால் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் பையா பல்வேறு சாதனைகளை படைத்தது. சொல்லப்போனால் கார்த்திக்கு பெண் ரசிகைகள் உருவாக ஆரம்பித்ததே இந்த படத்தில் இருந்து தான் என்று சொல்லலாம்.
கார்த்தி, தமன்னா இருவரின் கேரியரிலும் மிகப்பெரிய அந்தஸ்தினை கொடுத்த இப்படம் சரியாக இதே நாளில் (ஏப்ரல் 2) 2010-ம் ஆண்டு வெளியானது. இந்தநிலையில் பையா படத்தில் முதலில் கார்த்தியின் ஜோடியாக நடிக்க இருந்த நடிகைகள் குறித்து தெரிய வந்துள்ளது.
அதன்படி முதலில் நயன்தாராவைத் தான் இப்படத்தில் நடிக்க லிங்குசாமி கேட்டிருக்கிறார். ஆனால் நயன்தாரா இப்படத்தில் நடிக்க சுமார் 1 கோடி ரூபாய் சம்பளம் கேட்டிருக்கிறார். லிங்குசாமி குறைத்துக்கொள்ளும்படி கேட்டும் நயன்தாரா பிடிகொடுக்கவில்லை.
இதனால் திரிஷாவை, லிங்குசாமி அணுக அவராலும் நடிக்க முடியாமல் போய்விட்டது. இதன் பிறகுதான் கார்த்தியின் ஜோடியாக நடிக்க தமன்னாவை லிங்குசாமி தேர்வு செய்துள்ளார். நயன்தாரா, திரிஷா நடிக்காவிட்டாலும் தமன்னா அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமான நடிப்பினை வழங்கி ரசிகர்கள் மனதிலும் நீங்கா இடம்பிடித்து விட்டார்.
ரசிகர்கள் மீண்டும் இப்படத்தினை திரையரங்குகளில் கண்டு ரசிக்கும் பொருட்டு, வருகின்ற ஏப்ரல் 11-ம் தேதி டிஜிட்டலில் பையா மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Rain Update: இந்த இடங்களுக்கு இடியுடன் கூடிய மழை உண்டு!
நம்பர் 1 இடத்தை தக்கவைத்த திரிஷா… சம்பளம் எவ்ளோன்னு பாருங்க!
ஸ்டார் ஹீரோவிற்கு வில்லியாகும் ஆண்ட்ரியா?