தன் மனைவி ஜோதிகா, மகன் தேவ் மற்றும் மகள் தியாவோடு நடிகர் சூர்யாசென்னையிலிருந்து மும்பைக்கு 2022 ஆம் ஆண்டு குடி பெயர்ந்தார். இதனால், சூர்யா மீது பல விமர்சனங்கள் எழுந்தது. அந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சூர்யா தற்போது விளக்கமாக பேசியுள்ளார்.
தி ஹாலிவுட் ரிபோர்ட்டர் இந்தியா என்ற இணையத்தில் பேசியுள்ள நடிகர் சூர்யா, “ 18 – 19 வயதில், ஜோதிகா சென்னைக்கு சினிமாவில் நடிக்க வந்தார். பின்னர், எங்களுக்கு திருமணம் நடந்தது. அதற்குபிறகு, அவர் எங்களுக்காக, எங்களோடு சென்னையிலேயே இருந்தார். அவர் தன் வாழ்வின் முதல் 18 வருடங்களே அவர் மும்பையில் இருந்துள்ளார்.
கிட்டத்தட்ட 27 வருடங்களாக சென்னையில் என்னுடனும், என் குடும்பத்தோடும்தான் நேரத்தை செலவிட்டார். தன் குடும்பம், வாழ்வியல், உறவினர்கள், நண்பர்கள் என எல்லாவற்றையுமே எங்களுக்காக விட்டுக்கொடுத்துள்ளார் என் மனைவி.
தற்போது தன் பெற்றோருடன் 27 வருடங்கள் கழித்து ஒன்றாக நேரம் செலவிடுவதை அவர் சந்தோஷமாக உணர்கிறார். ஜோதிகாவிற்கு, விடுமுறை கொண்டாட்டம், நண்பர்கள் வட்டம், பொருளாதார சுதந்திரம் எல்லாமே தேவைப்பட்டுள்ளது. அவருக்கு ஜிம் செல்ல நேரம், தனிமையான நேரம் என எல்லாமே தேவை என்பதை நான் புரிந்து கொண்டுள்ளேன்.
அதனால்தான் சொல்கிறேன்… ஒரு ஆணுக்கு என்னென்ன விஷயங்கள் வாழ்க்கையில் தேவைப்படுகிறதோ, எதற்காகவெல்லாம் அவன் ஓடுகிறோனோ… அதெல்லாம் ஒரு பெண்ணுக்கும் தேவைப்படுகிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். எப்போதும் ஒரு ஆண் எடுப்பவனாகவே இருக்க வேண்டும். கொடுப்பவனாக இருக்க கூடாதா? இந்த கேள்விகள்தான், மும்பைக்கு எங்களை நகர வைத்தது” இவ்வாறு நடிகர் சூர்யா கூறியுள்ளார்.