தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக, வில்லனாக, துணை நடிகராக பல படங்களில் நடித்து தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல நடிகர் என்று பெயர் எடுத்தவர் பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு.
இவர் தமிழிலும் தாண்டவம், லிங்கா, விஸ்வாசம், அண்ணாத்த போன்ற பல படங்களில் வில்லனாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.
தற்போது இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சலார் படத்திலும், இயக்குனர் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படத்திலும் நடிகர் ஜெகபதி பாபு மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
நடிகர் ஜெகபதி பாபுவிற்கு நிறைய ரசிகர் மன்றங்கள் உள்ளது. இந்நிலையில் தனது ரசிகர் மன்றத்திற்கும் எனக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை என நடிகர் ஜெகபதி பாபு தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.
నా అభిమానులకు మనవి…. pic.twitter.com/iLN9tToL7T
— Jaggu Bhai (@IamJagguBhai) October 7, 2023
அந்த பதிவில், “என் 33 ஆண்டுகள் சினிமா வாழ்க்கையில் என் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த ரசிகர்களை என் குடும்பமாக பார்த்தேன்.
பல ஆண்டுகளாக நான் எனது ரசிகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆதரவாக நின்று, அவர்களது குடும்பத்தில் ஒருவராகவே மாறிவிட்டேன். ஆனால் அதெல்லாம் இப்போது முழுமையாக மாறிவிட்டதாக தெரிகிறது.
சில ரசிகர்களிடம் அன்பை விட பேராசை மற்றும் எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. அளவு கடந்த எதிர்பார்ப்புகள் இப்போது என்னை தொந்தரவு செய்யவும் தொடங்கி விட்டது.
இனிமேல் எனக்கு ரசிகர் மன்றங்களுடன் எந்த தொடர்பும் இல்லை என்பதை மனவேதனையுடன் சொல்லிக் கொள்கிறேன்.
இருப்பினும் என்னை உண்மையாக நேசிக்கும் என் ரசிகர்களுக்காக நான் எப்போதும் இருப்பேன் வாழு வாழ விடு” என நடிகர் ஜெகபதி பாபு தெரிவித்திருக்கிறார்.
நடிகர் ஜெகபதி பாபுவின் இந்த திடீர் முடிவு தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
– கார்த்திக் ராஜா
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
மகாளய அமாவாசை: ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள்!
கைமாறும் Hotstar, Star Network :கலாநிதி மாறனுடன் பேச்சுவார்த்தை?