ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘ரகு தாத்தா’ திரைப்படம் ஆகஸ்ட் 15ந் தேதி வெளியாகிறது. படம் வெளியாக சில தினங்களே உள்ளதால் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படு பிஸியாக உள்ளார் கீர்த்தி சுரேஷ். மதுரையில் நடைபெற்ற ப்ரோமோஷனில் பேசிய அவர், வரும் காலத்தில் அரசியலுக்கு வரும் ஆசை வரலாம் என பேசி இருக்கிறார்.
மேலும், மதுரை தனக்கு ரொம்ப பிடித்த ஊர் என்றும் மதுரைக்கு தான் அடிக்கடி வந்து செல்வதாகவும் தெரிவித்துள்ளார். இந்த ஊர் மல்லிகை பூ, மீனாட்சியம்மன் கோயில், ஜிகர்தண்டா என மதுரையில் தனக்கு பிடித்தமான நிறைய விஷயம் இருப்பதாகவும் கீர்த்தி சுரேஷ் குறிப்பிட்டார்.
மேலும் , தான் இப்போதைக்கு அரசியலுக்கு வர வாய்ப்பில்லை என்றும் இப்போதைக்கு நடிப்பு மட்டும் தான் தனது குறிக்கோளாக இருப்பதாகவும் கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அரசியல் ஆசை வரலாம், வராமலும் இருக்கலாம் என்றும் ரகு தாத்தா படம் இந்தி திணிப்புக்கு எதிரான படம் என்றும் கீர்த்தி சுரேஷ் தெரிவித்தார்.
இது போன்ற படத்தை தமிழ் நாட்டில் மட்டும் தான் பேச முடியும் என்றும் இந்திக்கு எதிராக பேசி விட்டு, இந்தி படத்தில் நடிக்கலாமா என்கிற கேள்வியும் இங்கு எழுகிறது அல்லவா? என்று தன்னை தானே கேட்டுக் கொண்ட கீர்த்தி சுரேஷ், தான் இந்தி மொழியை எதிர்க்கவில்லை என்றும் இந்தியை திணிக்கக்கூடாது என்பது தான் தன்னுடைய கருத்து என்றும் தெளிவாக கீர்த்தி சுரேஷ் விளக்கமளித்துள்ளார்.
மேலும், இந்த படத்தில் பெண்ணியத்திற்காக போராடக்கூடிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் பெண்கள் மீது பல கட்டுப்பாடுகளை திணித்து வருகிறார்கள் என்றும் கீர்த்தி சுரேஷ் பேசியுள்ளார். கலாச்சாரம் என்ற பெயரில் சின்ன சின்ன விஷயங்கள் திணிக்கப்படுவதை படத்தில் ரகுதாத்தா படத்தில் காமெடியாக சுட்டிக் காட்டியுள்ளதாகவுத் கீர்த்தி சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.
-எம்.குமரேசன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நெட்பிளிக்ஸில் மஜா காட்டும் ‘மகாராஜா’
பிரதமரை கொஞ்சி தேசத்தின் டார்லிங்கான நயிஷா… நிலச்சரிவில் தந்தை, சகோதரிகளை இழந்த சிறுமி!