ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரிந்தது ஏன்? : சாய்ரா பானு விளக்கம்!

Published On:

| By christopher

Why did she break up with A.R. Rahman?: Saira Banu explains!

ஏ.ஆர். ரகுமான் விவாகரத்து அறிவித்ததை தொடர்ந்து, அவரது மனைவி சாய்ரா பானு ஆடியோ மூலம் இன்று (நவம்பர் 24) விளக்கம் அளித்துள்ளார்.

இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று அனைவராலும் கொண்டாடப்படும் இசையமைப்பாளராக உள்ளவர் இந்திய திரையுலகில் கோலோச்சுபவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்.

சமீபகாலமாக பிரபலங்களின் விவாகரத்து அதிகரித்து வரும் நிலையில், அதில் ஏ.ஆர். ரகுமானும் இணைந்தார். தனது 29 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.  இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கிடையே இவர்களது விவாகரத்து குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் வகையில் வீடியோக்கள் வெளிவந்து சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. இதனையடுத்து அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் கூறி ஏ.ஆர்.ரகுமான் சார்பில் அவரது வழக்கறிஞர் நர்மதா சம்பத், சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்களுக்கும், யூடியூபர்களுக்கும் நேற்று நோட்டீஸ் அனுப்பி எச்சரித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக ஏ.ஆர். ரகுமான் குறித்து சாய்ரா பானு வெளியிட்டுள்ள இன்று ஆடியோ வெளியிட்டுள்ளார்.

உலகிலேயே மிகச்சிறந்த மனிதர் அவர்!

அதில், “நான் சாய்ரா ரகுமான் பேசுகிறேன். இப்போது மும்பையில் தங்கி இருக்கிறேன். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், நான் இப்போது சென்னையில் இல்லை. ஏ.ஆர்.ரகுமான் மீது தயவு செய்து யாரும் அவதூறு பரப்பாதீர்கள். இந்த உலகிலேயே மிகச்சிறந்த மனிதர் அவர். அவர் போன்ற அற்புதமான ஒரு மனிதரை பார்க்க முடியாது. எனவே அவர் மீதான அனைத்து பொய்யான குற்றச்சாட்டுகளையும் நிறுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

சிகிச்சைக்காக மும்பை வந்துள்ளேன்!

கடந்த சில மாதங்களாக எனக்கு உடல்நிலை சரியில்லை. அதற்காக நான் மும்பையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறேன். இதன் காரணமாக தான் ஏ.ஆர்.ரகுமானிடம் இருந்து கொஞ்ச காலம் நான் பிரேக் எடுத்துக் கொள்ள விரும்பினேன்.

ரகுமான் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாதீர்கள்!

என் உடல்நிலை காரணமாக தான் இந்த பிரிவு. ஏ.ஆர்.ரகுமானின் பிசியான இந்த நேரத்தில் அவரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. என் குழந்தைகளையும் நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அவர் மீது நான் வைத்த நம்பிக்கை என் வாழ்வை விட பெரியது. அவர் அந்தளவு சிறந்த மனிதர். நான் அவரை அந்த அளவுக்கு நேசிக்கிறேன். சிகிச்சை முடிந்தவுடன் விரைவில் நான் சென்னை திரும்புவேன். அவர் பெயருக்கு தயவு செய்து யாரும் களங்கம் ஏற்படுத்தாதீர்கள். அவர் மிகச்சிறந்த மனிதர்” இவ்வாறு சாய்ரா பானு அதில் பேசியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

“பிரிந்து சென்றவர்களை எடப்பாடி ஒன்றிணைக்கிறார்” – ராஜேந்திர பாலாஜி

“கூட்டணி கட்சிகள் இல்லாமல் திமுக, அதிமுகவால் வெல்ல முடியாது” – கே.பாலகிருஷ்ணன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share