இளைஞர் ஒருவரை அடித்த விவகாரத்தில் பாலிவுட் நடிகர் நானா படேகர் மன்னிப்பு கேட்டுள்ளார். Nana Patekar apologized
தமிழில் பொம்மலாட்டம், பீமா, ரஜினியுடன் காலா உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவர் நானா படேகர்.
இந்தி மற்றும் மராத்தியில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தி வேக்சின் வார்படத்தில் நடித்திருந்தார். இப்போது ஜார்னி என்ற தலைப்பில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவருடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவரின் தலையில் வேகமாக நானா படேகர் தட்டிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது.
அந்த வீடியோவில் வாரணாசியில் உள்ள தெருவில் ஜார்னி படத்தின் படப்பிடிப்புக்காக அதற்கான கெட்டப்பில் நின்று கொண்டிருந்தபோது ஒரு இளைஞர் அவருடன் செல்பி எடுக்க முயல்கிறார். அப்போது நானா படேகர் இளைஞரின் பின்னந்தலையில் வேகமாக அடிப்பது பதிவாகியுள்ளது.
இந்த வீடியோவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்று (நவம்பர் 16) மன்னிப்பு கேட்டு அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் இந்தியில் பேசியுள்ள அவர், “படத்தின் ஒரு காட்சிக்காக ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு நபர் உள்ளே வந்தார்.
படத்தில் இடம் பெறும் ஒரு காட்சியின்படி படக்குழுவினர் என்று நினைத்து அவரை அறைந்தேன். பின்னர் தான் அவர் பட குழுவில் இல்லை என்பது எனக்கு தெரியவந்தது. எதிர்பாராத விதமாக அந்த நபர் உள்ளே வந்து விட்டார். இதை அறிந்து அவரை மீண்டும் அழைத்த போது அவர் அங்கிருந்து ஓடி விட்டார்.
அவரது நண்பர் இந்த வீடியோவை எடுத்திருக்கலாம். இந்த சம்பவம் தவறுதலாக நடந்து விட்டது. தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் இனி இதுபோன்று எப்போதும் செய்யமாட்டேன்” என்று கூறியுள்ளார். Nana Patekar apologized
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
100 சதவிகிதம் கப்பு நமதே: ரஜினிகாந்த்
வேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள்!
ராஜஸ்தான் தேர்தல்: பாஜக முக்கிய வாக்குறுதிகள் என்னென்ன?
உள்ளாட்சி பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பாதது ஏன்?