என்னை அறிந்தால் படத்திற்கு பின் பிற கதாநாயகர்கள் நடிக்கும் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த அருண் விஜய் தற்போது தனுஷ் நடிக்கும் படம் ஒன்றில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடித்திருக்கும் ’வணங்கான்’ படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. அதனை தொடர்ந்து, மான்கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கத்தில் அருண்விஜய் நடிக்கும் ’ரெட்டதல’ படம் முடிவடையும் தருவாயில் உள்ளது.
இதற்கிடையே ராயன் பட வெற்றியின் மூலம் நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் தனுஷ் வெற்றி பெற்றதால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார். அவர் இயக்குநராக பணியாற்றியிருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை விரைவில் வெளியிடும் வேலைகளில் இறங்கியிருக்கிறார்.
போர்த்தொழில் பட இயக்குநர் விக்னேஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும், அவரே இயக்கி நடிக்கும் படம் ஒன்றையும் தொடங்கும் வேலைகள் நடைபெற்று வருகிறது.
கதை.. கதாப்பாத்திரம்.. சம்பளம்!
இந்த நிலையில், தான் இயக்கி நடிக்கும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க அருண்விஜயிடம் கேட்டிருக்கிறார் தனுஷ்.
என்னை அறிந்தால் படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழில் பிற கதாநாயகர்களின் படங்களில் நடிக்க அருண்விஜயை ஏராளமான இயக்குநர்கள் தொடர்பு கொண்ட போது இனிமேல் கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் எனக் கூறி தேடி வந்த வாய்ப்புக்கள் எல்லாவற்றையும் தவிர்த்து விட்டார்.
தற்போது தனுஷ் கூறிய கதையும் அதில் தனது கதாபாத்திரமும் ரொம்ப பிடித்துப் போய் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. கதாநாயகனாக நடிக்க அருண் விஜய் வாங்கும் சம்பளத்தை காட்டிலும் அதிக சம்பளம் தருவதாகவும் கூறப்பட்டதால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் நடிக்க சம்மதித்திருக்கிறார் அருண் விஜய்.
இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்தக் காரணங்களால் தனுஷ் அழைப்பை அருண்விஜய் ஏற்றுக் கொண்டார் என்றும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
நடப்பு கல்வியாண்டின் திருத்தப்பட்ட நாட்காட்டி வெளியானது!