நடிகர் பிரபுவை தாக்கிய நோய்… மூளை அனீரிசிம் வர என்ன காரணம்?

Published On:

| By Kumaresan M

நடிகர் பிரபு அஜித்தின் குட் பேட் அக்லீ’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள மருத்துவமனையில் அவருக்கு மூளை அனீரிஸம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

தற்போது, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி விட்டார். குடும்பத்தினர் அவரை கவனித்து கொள்கின்றனர்.

மூளை அனீரிஸம் என்பது மூளையில் உள்ள ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்படுவதாகும். இது ஒரு சிறிய குமிழ் மாதிரி உருவாகும். வெடித்து விட்டால், இது மூளையில் ரத்தப்போக்கு ஏற்பட வழிவகுக்கும். ரத்தக்கசிவு என்பது ஒரு தீவிர நிலை. எனவே, அதற்கு இடம் கொடுக்காமல் முன்னரே நடிகர் பிரபுவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

மூளை அனீரிசிம்களுக்கான காரணங்கள் முழுமையாக கண்டறியப்படவில்லை. 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் பெண்களை இந்த நோய் தாக்க வாய்ப்புள்ளது. உயர் ரத்த அழுத்தம் இருப்பது பொதுவான காரணமாக கூறப்படுகிறது.

அடிக்கடி தலைவலி, பார்வை மங்குவது, தலையின் உணர்வின்மை, கண்களுக்கு மேல் அல்லது பின்னால் வலி மற்றும் கழுத்து வலி , குமட்டல் போன்ற அறிகுறிகள் இந்த நோய் தாக்கினால் காணப்படும். CT ஸ்கேன் அல்லது MRI ஸ்கேன் போன்றவை வழியாக இந்த நோய் தாக்கத்தை கண்டுபிடித்து விட முடியும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share