சண்டைப் பயிற்சியாளராக வேண்டும் என கனவுடன் முத்துக்காளை தனது 18-வது வயதில் கராத்தேவில் ப்ளாக் பெல்ட் வென்றார். தொடர்ந்து, சினிமா மீது இருந்த காதலால் தனது சொந்த ஊரான ராஜபாளையத்தில் இருந்து சென்னை வந்தார். நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை பட்டாளத்தில் இடம்பெற்று நகைச்சுவை நடிகராக கலக்கினார்.
ஒரு படப்பிடிப்புக்கு முத்துக்காளை லேட்டாக வர, நடிகர் வடிவேலு ’முதலில் அல்வா வாசு குடிச்சு சாவான், அப்புறம் இந்த முத்துக்காளையும் குடிச்சு சாவான்’ என்று திட்டியுள்ளார். இதையடுத்து, குடியை விட்ட முத்துக்காளை கடந்த 9 ஆண்டு காலமாக மது பக்கமே போகவில்லை.
அதோடு, தனது மகனை பள்ளியில் சேர்க்க சென்ற போது, பெற்றோரின் படிப்பு என்ன? என்று கேட்கப்பட்ட இடத்தில் வெற்றிடமாக நிரப்ப வேண்டிய அவமானமும் ஏற்பட்டுள்ளது. அப்போது, முத்துக்காளை 10 ஆம் வகுப்பு கூட பாஸ் செய்திருக்கவில்லை. இதை சவாலாக எடுத்துக் கொண்ட முத்துக்காளை படிப்பு பக்கம் தனது கவனத்தை திருப்பினார்.
தொடர்ந்து, கடந்த 2017-ம் ஆண்டு தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைகழகத்தில் சேர்ந்து பி.ஏ. வரலாறு படித்தவர் தேர்ச்சி பெற்றார். பின்னர், 2019-ம் ஆண்டு எம்.ஏ தமிழ் படித்தவர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னர் பி.லிட் பட்டத்தையும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். தற்போது, மற்றொரு பட்டத்தையும் படித்து கொண்டிருக்கிறார். இந்த தகவலை சமீபத்தில் நடந்த மேடை நிகழ்ச்சியில் முத்துக்காளையே தெரிவித்துள்ளார்.
58 வயதாகும் முத்துக்காளை 3 பட்டங்களைப் பெற்றுள்ளார். சினிமாவிலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று கொண்டே முத்துக்காளை பட்டங்களை பெற்றது வியப்புக்குரிய விஷயம்தான்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
தமிழக வெற்றிக் கழக கொடியை அறிமுகம் செய்தார் விஜய் : கொடி செல்லும் செய்தி என்ன?
கொடி அறிமுகம் : தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழி என்ன?