Who will win the Pongal competition?

பொங்கல் போட்டியில் ஜெயிக்க போவது யார்?

சினிமா

சிவாஜி – எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் – ரஜினிகாந்த், அஜீத்குமார் – விஜய் என தமிழ் சினிமாவில் எல்லா காலகட்டங்களிலும் இரு துருவ கதாநாயகர்களின் ஆதிக்கம் இருந்து வருகிறது.

இளைய தலைமுறை நடிகர்களில் அந்த இடத்திற்கு யார் வரப்போகிறார்கள் என்கிற போட்டி கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாகி வருகிறது என்று தான் கூற வேண்டியுள்ளது.

சிலம்பரசன் – தனுஷ் என்கிற போட்டியில் தற்போது சிலம்பரசன் இல்லை என்றாகிவிட்டது. சிவகார்த்திகேயன் குறுகிய வருடங்களில் வியாபார முக்கியத்துவம்மிக்க நாயகனாகி குடும்பங்கள் விரும்பும் மசாலா படங்களின் நடிகராக விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். அதே போன்று நடிகர் தனுஷ் தனது தனித்திறமையாலும், கதை தேர்வுகளாலும் எல்லா தரப்பினராலும் ரசிக்ககூடிய நடிகராக உயர்ந்திருக்கிறார்.

அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட சிவகார்த்திகேயன் அவருக்கு இணையான போட்டியாளராக அயலான் படத்தின் மூலம் பொங்கல் போட்டியில் களமிறங்குகிறார்.

Rs 38 crore for Dhanush, Rs 34 crore for Sivakarthikeyan... Exciting information! - News - IndiaGlitz.com

ஆரோக்கியமான போட்டி அதன் இயல்பில் போகட்டும் வெற்றி தோல்வியை மக்கள் தீர்மானிக்கட்டும் என திரையரங்குகளும், விநியோகஸ்தர்களும் காத்திருக்கின்றனர். ஆனால் தனது போட்டியாளர் படத்தை காலி செய்யும் வேலையை கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல்லெறிவது போன்று இரண்டு நடிகர்களின் சமூகவலைதள படைகள் செய்து வருவதை கவலையுடன் கவனித்துக்கொண்டிருக்கின்றனர் தமிழ் சினிமா வட்டாரத்தில்.

இந்த வருட பொங்கல் போட்டியில் தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’, சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’, அருண் விஜய் நடித்துள்ள ‘மிஷன் சாப்டர் 1’ நேரடி தமிழ் படங்களும் இலவச இணைப்பாக இந்தியில் தயாரான மேரி கிறிஸ்துமஸ், தெலுங்கில் தயாரிக்கப்பட்டுள்ள ஹனுமான் ஆகிய  படங்கள் களம் இறங்கியுள்ளன. இவற்றில், ‘கேப்டன் மில்லர், அயலான்’ படங்களுக்கு இடையேதான் நேரடிப் போட்டி என்கிறது திரையரங்குகள் வட்டாரம்.

വാരിസും തുണിവും ഒരുദിവസം, സ്ക്രീനുകൾ തുല്യമായി വീതിച്ചുനൽകുമെന്ന് ഉദയനിധി സ്റ്റാലിൻ, Varisu, Thunivu, Varisu Song, Varisu Release Date, Thunivu Release Date, Vijay, Ajith

வாரிசு துணிவு மோதல்!

சம பல போட்டி இல்லாமல் வெளியான ரஜினிகாந்த், விஜய், அஜீத்குமார் படங்கள் வசூல் சாதனை என கூறப்பட்டு வந்ததை கடந்த வருடம் பொங்கலை முன்னிட்டு 2023ஜனவரி 11 அன்று வெளியான துணிவு, வாரிசு படங்களின் வசூல் கணக்கு முடிவுக்கு கொண்டு வந்தன. இரண்டு படங்களும் தமிழ்நாட்டில் 100 கோடி ரூபாய் மொத்த வசூலை எட்டுவதற்கே மூச்சு திணறியது. உலக அளவில் 300 கோடி ரூபாயை எட்டிப் பிடிக்க தடுமாறியது துணிவும், வாரிசும்.

ஆனால் அஜீத்குமார், விஜய் இருவரது சமூக வலைத்தள தீவிர செயல்பாட்டாளர்கள், தொழில்முறை புரமோட்டர்கள் துணிவை துரத்தி அடித்த வாரிசு, வாரிசை வா ரிசுருட்டிய துணிவு என்று சமூக வலைதளங்களில் தவறான வசூல் கணக்கை வெளியிட்டனர். கதையை, பாக்ஸ் ஆபீஸ் உண்மையான வசூல் கணக்கை காட்டிலும் சமூக வலைதளங்களில் தங்கள் ஆதரவு எண்ணிக்கையை பிரதான இலக்காக கொண்டு நடிகர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

2024 பொங்கல் வெளியீட்டில் சமூக வலைத்தள புரமோஷன் அதிதீவிரமாக இருக்கும் என்கின்றது சிவகார்த்திகேயன், தனுஷ் வட்டாரங்கள். தேர்தல் காலங்களில் உதிரிக்கட்சிகளை, சாதி, மத அமைப்புகளின் ஆதரவை பெறவும், கூட்டணியில் இணைக்கவும் கட்சிகள் பேரம் பேசுவதை போன்று அயலான், கேப்டன் மில்லர் படங்களுக்கான ஆதரவு தளங்களை உருவாக்க யூடியுப்பர்கள், X தள செயல்பாட்டாளர்களை விலைபேசி முடித்துள்ளனர்.

தீபாவளி கொண்டாட டோக்கன் அட்வான்ஸ் கொடுத்து விரிவான ஆதரவு தளத்தை தயார் செய்து புரமோஷனை சிவகார்த்திகேயன் தரப்பு செய்து வருகிறது. தனுஷ் தரப்பு தாமதமாக விழித்து தற்போது ஆதரவு தளங்களை விலைபேசி வருகின்றனர்.

அதிரடியா? அமைதியா?

லால்சலாம் பொங்கலுக்கு வெளியிட முடியாததால் மிஷன் சாப்டர் – 1 படத்தை வெளியானால் போதும் என்கிற மனநிலையில் லைகா நிறுவனம் ரீலீஸ் செய்வதாக கூறப்படுகிறது. காத்ரினா கைஃப் கதையின் நாயகியாக நடித்துள்ள படத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளதால் தமிழ்நாட்டில் வெளியிடப்படுகிறது. பாக்ஸ் ஆபீஸ் வசூலில் தாக்கத்தை மேரி கிறிஸ்துமஸ் ஏற்படுத்தாது என்பதால் அயலான், கேப்டன் மில்லர் படங்களை திரையிடவே திரையரங்குகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

அயலான் டிரைலர் 5ம் தேதியும், கேப்டன் மில்லர் டிரைலர் 6ம் தேதியும் யு டியூபில் வெளியானது. முதல் மூன்று நாட்களில் கேப்டன் மில்லர் டிரைலர் 89 லட்சம் பார்வைகளையும், ‘அயலான்’ டிரைலர் 83 லட்சம் பார்வைகளையும், மிஷன் சாப்டர் 1′ தமிழ் டிரைலர் 44 லட்சம் பார்வைகளையும் கடந்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கைகள் படத்திற்கான வெற்றியை தீர்மானிக்காது என்பது தான் கடந்தகால வரலாறு. கதை மட்டுமே படத்தின் வெற்றியை தீர்மானிக்கும்.

பொங்கல் பண்டிகை தீபாவளி போன்று அதிர்வேட்டுகள் முழங்க கொண்டாடப்படும் பண்டிகை இல்லை என்பதால் குடும்பங்களுடன் கூட்டமாக சென்று பார்க்ககூடிய வன்முறையும், ரத்தமும் இல்லாத திரைப்படங்களையே மக்கள் விரும்புவார்கள். ஆனால் ஜனவரி 12 அன்று வெளியாகும் கேப்டன் மில்லர், மிஷன் சேப்டர் – 1 இரண்டு படங்களும் ரத்தம் தெறிக்கும் வன்முறை மிகுந்த சண்டை காட்சிகள் நிறைந்த படங்களாக இருக்கும் என்பதை டிரைலர்கள் உணர்த்துகிறது.

120 நாட்கள் நடைபெற்ற கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் 75 நாட்கள் ஆக்க்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டதாக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார் என்பதை பார்க்கும் போது திரையரங்குகளில் துப்பாக்கி தோட்டா சத்தமும், ரத்தம் தெறிக்கும் காட்சிகள் நிரம்பிய படங்களாக கேப்டன் மில்லர், மிஷன் சேப்டர் – 1 இருக்க இவற்றுக்கு நேர் எதிராக அயலான், விஜய்சேதுபதி நடிப்பில் வரும் மேரி கிறிஸ்துமஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

இராமானுஜம்

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்: சேலத்தில் 300 பேர் கைது!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *