விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 8 கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது.
இதில் ரவீந்தர் சந்திரசேகர், முத்துக்குமரன், ஜாக்லின், செளந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, பவித்ரா ஜனனி, விஜே விஷால், ஆர்.ஜே. ஆனந்தி, மஞ்சரி, வர்ஷினி, சுனிதா, ரயான், ஜெப்ரி, ரஞ்சித், தர்ஷா குப்தா, சஞ்சனா, அக்ஷிதா, அர்னாவ், சத்யா, தீபக் உள்ளிட்ட 24 பேர் போட்டியாளர்களாக பங்கேற்றனர்.
கடந்த 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் இந்த சீசனில் தொகுப்பாளரான விஜய் சேதுபதிக்கு வரவேற்பும் விமர்சனங்களும் எழுந்தன. மேலும் போட்டியாளர்கள் சமூகவலைதளங்களில் பி.ஆர் மூலம் விளம்பரப்படுத்தி கொள்கிறார்கள் என குற்றச்சாட்டும் எழுந்தது.
இந்த நிலையில் 100 நாட்களை கடந்த இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி இன்று (ஜனவரி 19) கோலகலமாக நடைபெற்றது.
இறுதிப்போட்டியாளர்களாக சவுந்தர்யா, ரயான், முத்துக்குமரன், வி.ஜே.விஷால், பவித்ரா ஜனனி ஆகியோர் தகுதிப்பெற்றனர். இறுதிப்போட்டியில் ரயானும், பவித்ராவும் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டனர். டாப் 3 போட்டியளார்களான மற்ற மூவர் மேடைக்கு வந்த நிலையில், விஷால் வெளியேற்றப்பட்டார்.

தொடர்ந்து டைட்டில் வின்னர் யார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழ, முத்துக்குமரனை வெற்றியாளராக அறிவித்தார் விஜய்சேதுபதி. தொடர்ந்து அவரது பெற்றோர் முன்னிலையில் பரிசுத்தொகையான ரூ.40 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.

முன்னதாக பரிசுத்தொகையை வென்றால் என்ன செய்வீர்கள் என்ற விஜய்சேதுபதி கேட்டதற்கு முத்துக்குமரன் கூறிய பதில் அனைவரையும் கவனிக்க வைத்தது.
அவர், “இந்த போட்டியில் வென்ற பரிசுத்தொகையில் நா. முத்துக்குமார் எழுதிய அணிலாடும் முன்றில், வேடிக்கைப் பார்ப்பவன் மற்றும் செல்வேந்திரன் எழுதிய வாசிப்பது எப்படி ? என்ற புத்தகங்களை அனைத்து அரசு பள்ளிகளிலும் பரிசாக வழங்குவேன்” என்று அவர் தெரிவித்தார்.
நடப்பு சீசனில் புத்தக பரிந்துரையை பலரும் மிஸ் செய்த நிலையில், சரியாக இறுதி மேடையில் முத்துக்குமரனின் புத்தகப் பரிந்துரை மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அமாவசை கணக்கு தெரியும் சார் : அப்டேட் குமாரு
சைஃப் அலிகான் மீது தாக்குதல்… பின்னணியில் வெளிநாட்டு சதி? நீதிமன்றம் உத்தரவு!
டிஜிட்டல் திண்ணை: மகளிர் உரிமைத் தொகை உயர்வு! ஸ்டாலின் mega மாஸ்டர் பிளான்!
பிரபாகரனுடன் சீமான் போட்டோ கிராபிக்ஸா? – இயக்குநர் சொல்வதென்ன?