பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்… இதெல்லாம் சரியில்ல புலம்பும் ரசிகர்கள்!

Published On:

| By Manjula

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த வாரம் பிக்பாஸ் டபுள் எவிக்ஷன் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிங்கிள் எவிக்ஷன் உடன் பிக்பாஸ் முடித்து கொண்டுள்ளார்.

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாயா, நிக்ஸன் இருவரையும் வீட்டினுள் தக்க வைத்து ரவீனாவை பிக்பாஸ் வெளியேற்றி இருக்கிறார்.

இதைப்பார்த்த ரசிகர்கள், ”ஒவ்வொரு முறையும் நீங்க மாயா, நிக்ஸன் ரெண்டு பேரையும் காப்பாத்த யாரையாவது பலிகடா ஆக்குறீங்க.

ரசிகர்கள் நடத்திய வாக்கெடுப்பு பல்வேறு நிறுவனங்கள் நடத்தும் வாக்கெடுப்பு என எல்லாத்துலயும் மாயா, நிக்ஸன விட அதிக வாக்குகள் ரவீனாவுக்கு கெடைச்சது.

ஆனா வாக்கெடுப்பு எதையுமே நீங்க கணக்கில எடுத்துக்காம இப்படி ஒவ்வொரு போட்டியாளரா வெளியே அனுப்புறீங்க.

இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை. மத்த சீசனோட ஒப்பிடும் போது இந்த சீசன் பிக்பாஸ் இருக்குறதுலேயே ரொம்ப மோசமா போய்ட்டு இருக்கு,” என சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர்.

இன்னும் 10 நாட்கள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு இருப்பதால் பிக்பாஸால் தக்க வைக்கப்படும் அந்த 5 பேர் யாராக இருப்பார்கள் என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: சுண்டல் வித் கோன்

பிரியாணி கடையா…ரேஷன் கடையா: அப்டேட் குமாரு:

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel