டைட்டில் வின்னர் இந்த போட்டியாளரா?… பிக்பாஸ் கொடுத்த க்ளூ!

சினிமா

டைட்டில் வின்னராக பிக்பாஸ் தேர்வு செய்யப்போகும் போட்டியாளர் யார்? என்பது தான் தற்போதைய ஹாட் டாபிக்.

சமூக வலைதளங்களிலும் இதுகுறித்து மக்கள் அதிகமாக பேசுவதால் இந்தியா முழுவதும், பிக்பாஸ் தமிழ் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

இந்த நிலையில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் அர்ச்சனா தான் என ரசிகர்கள் அடித்துக் கூறுகின்றனர். அதற்கு ஏற்றார்போல வாக்கெடுப்பின் அடிப்படையிலும் அர்ச்சனா, தினேஷ், மணிசந்திரா மூவரும் தான் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

இதனால் டைட்டிலை அர்ச்சனா வெல்வார் என்றும், இரண்டாவது இடம் மணி அல்லது தினேஷ் இருவரில் ஒருவருக்கு கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் பிக்பாஸ் தற்போது ஒரு க்ளூ கொடுத்துள்ளார். அதாவது போட்டியாளர்களின் பயண வீடியோவை ஒளிபரப்பிய பிக்பாஸ் கடைசியாக அர்ச்சனா, மணி வீடியோவினை ஒளிபரப்பி இருக்கிறார்.

கடந்த சீசன்களை எடுத்து பார்த்தால் கடைசி இரண்டு பயண வீடியோக்களில் இடம்பெற்ற போட்டியாளர்கள் தான் வின்னர், ரன்னராக இருந்திருக்கிறார்கள்.

ஐந்தாவது சீசனில் ராஜு-பிரியங்கா, ஆறாவது சீசனில் அசீம்-விக்ரமன் ஆகியோரின் பயண வீடியோக்கள் கடைசியாகத் தான் ஒளிபரப்பாகின.

இதைக்குறிப்பிட்டு தான் இந்த சீசனின் வின்னர் அர்ச்சனா, ரன்னர் மணிசந்திரா என ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

எனினும் பிக்பாஸ் சில நேரங்களில் கோக்குமாக்காக முடிவெடுப்பார் என்பதால், இந்த சீசனின் வின்னர் யார்? என்பதை நாம் வழக்கம்போல காத்திருந்து பார்க்கலாம்.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அரசு மருத்துவமனைகளில் ஓராண்டே போதுமாம்: மருத்துவ மாணவர்களுக்கு அரசின் சலுகை!

தொடர் விடுமுறை: பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0