இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் கடந்த டிசம்பர் 01 ஆம் தேதி வெளியான படம் “அனிமல்”. இந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, அனில் கபூர், பாபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
அனிமல் படம் 5 நாளில் இதுவரை 481 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனிமல் படம் முழுக்கவே பிரம்மாண்டத்திற்கு பஞ்சமில்லை. பெரிய மிஷின் கன், சொகுசு கார்கள், பிளைட்டில் காதல், இவ்வளவு ஏன் யாகம் செய்யும் காட்சியில் கூட பிரம்மாண்டம் தான்.
இத்தனை பிரம்மாண்டங்கள் இருந்தாலும் அனிமல் படத்தில் ரன்பீர் கபூரின் வீடாக காட்டப்படும் அரண்மனை தான் உண்மையான பிரம்மாண்டம்.
அனிமல் படத்தில் காட்டப்படும் அந்த அரண்மனையின் பெயர் பட்டோடி பேலஸ். பட்டோடி பேலஸின் விலை சுமார் 800 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. ஹரியானா மாநிலத்தில் உள்ள கூர்கான் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அரண்மனை நவாப் மன்னர் இஃப்திகார் அலி கான் தனது மனைவிக்காக கட்டினார். மன்னர் குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வந்த இந்த அரண்மனை ஒரு காலகட்டத்திற்கு பின் ஸ்டார் ஹோட்டலாக மாறியது.
தற்போது இந்த அரண்மனை பிரபல பாலிவுட் நடிகர் சையிப் அலிகான் அவர்களுக்கு சொந்தமாக உள்ளது. இந்த அரண்மனையில் மொத்தம் 150 அறைகள் உள்ளது. 800 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த அரண்மனையை எப்படியாவது வாங்க வேண்டும் என்பதற்கான நடிகர் சையிப் அலிகான் தொடர்ந்து பல படங்களில் நடித்து சினிமாவில் கோடி கோடியாய் சம்பாதிக்க தொடங்கினார் என்று கூறப்படுகிறது.
அனிமல் படம் பார்க்கும் போது நிச்சயம் இந்த அரண்மனை உங்கள் கவனத்தை ஈர்க்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
வெள்ள பாதிப்பு நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க முதல்வர் கடிதம்!
ஆவின் பால் கடும் தட்டுப்பாடு… பொதுமக்கள் அவதி: அமைச்சர் வேண்டுகோள்!