நடிகர் விஜயகாந்தின் முதல் தயாரிப்பாளர் யார் தெரியுமா? சமீபத்தில் உயிரிழந்த சோகம்!

சினிமா

நடிகர் விஜயகாந்தின் முதல் படத்தயாரிப்பாளராக இருந்து அவரை அறிமுகப்படுத்தியவர் கம்பம் எஸ்.பூமிநாதன். விஜயகாந்த் நடித்த முதல் படம் ’இனிக்கும் இளமை’ எம்.ஏ.காஜா இயக்கிய இந்த படத்தில் வில்லனாகத்தான் விஜயகாந்த் நடித்தார்.

கம்பத்தை சேர்ந்த எஸ். பூமிநாதன் கடந்த மாதம் 19ம் தேதி 82வது வயதில் காலமானார். விஜயகாந்த் பட வாய்ப்புக்காக போராடிக்கொண்டிருந்தபோது, அவரை அடையாளம் கண்டுகொண்டவர்களில் கம்பம். பூமிநாதன் முக்கியமானவர்.

விஜயகாந்த் ஒருமுறை பிரசாரத்துக்காக கம்பம் வந்தபோது பூமிநாதனை பற்றி புகழ்ந்து பேசினார். அவர்தான் தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்தியதாகவும் கூறினார். பூமிநாதன், மாந்தோப்பு கிளியே, இளமை கோலம் ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார்.

மதுரையின் பெரிய விநியோகஸ்தராக இருந்த முகம்மது மஸூர் என்பவர் விஜயகாந்துக்கு நெருங்கிய நண்பர். அப்போது எம்.ஏ.காஜா இயக்கிக் கொண்டிருந்த இனிக்கும் இளமை படத்தில் விஜய்ராஜுக்கு வாய்ப்புத் தந்தால் மதுரை ஏரியாவை வாங்கிக் கொள்வதாகச் கூறி அந்தப் படத்தில் வில்லன் வேடம் பெற்றுத் தந்தார். விஜயராஜை ‘விஜய்காந்த்’ என்று பெயர் மாற்றி எம்.ஏ. காஜா நடிக்க வைத்தார்.

நடிகர் விஜயகாந்த் ரஜினிக்கு தம்பியாக ‘என் கேள்விக்கு என்ன பதில்’ என்கிற படத்தில்   101 ரூபாய் முன்பணம் வாங்கிக்கொண்டு நடித்தார். மூன்று நாள் மட்டுமே நடித்திருந்த நிலையில் படத்திலிருந்து நீக்கப்பட்டார்.

இந்த அவமானத்தால், கொதித்து போன விஜயகாந்த் தனது புகைப்பட ஆல்பத்துடன் கோடம்பாக்கம் முதல் விருகம்பாக்கம் வரை சினிமா கம்பெனிகளில் ஏறி இறங்கி வாய்ப்புகளை பெற்று தமிழின் மூன்றாவது பெரிய நடிகராக உயர்ந்தது வரலாறு. ஆனால், அதற்கு விதை போட்டவர் கம்பம்.எஸ். பூமிநாதன் என்பது பலரும் அறியாத விஷயம் ஆகும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை நேரடியாக கண்காணிக்கப்படும் : உச்சநீதிமன்றம்!

ஆம் ஆத்மி எம்எல்ஏ அமலாக்கத் துறையால் கைது!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *