இப்போது சர்வ சாதாரணமாக பல படங்கள் ஆயிரம் கோடி வசூலை எட்டுகின்றன. ஆனால், 40 வருடங்களுக்கு முன்பு 100 கோடி வசூலை எட்டினால் அது மகத்தான சாதனை ஆகும்.
இந்தியாவில் முதன் முதலில் 100 கோடி வசூலை கொடுத்த படத்தில் அமிதாப்போ, ரஜினிகாந்தோ, கான் நடிகர்களோ நடிக்கவில்லை. நடிகர் மிதுன் சக்கரவர்த்தி நடித்த டிஸ்கோ டான்ஸர் படம்தான் முதன் முதலில் இந்தியாவில் 100 கோடி வசூலித்த படம் ஆகும். இந்த படம் 1982-ஆம் ஆண்டு வெளியானது.
பப்பார் சுபாஷ் இயக்கிய இந்த படத்தின் கதை ரொம்ப சாதாரணமானது. சாதாரண தெருபாடகன் டிஸ்கோ டான்சர் ஆவதுதான் கதை. பப்பிலஹிரி இசையில் பாடல்கள் செம ஹிட் அடித்தன. இதுதான் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஆனால், இந்தியாவில் இந்த படம் வெறும் 6 கோடிதான் வசூலித்தது. வெளிநாடுகளில்தான் வசூல் கொட்டியது.
ரஷ்யாவில் டிஸ்கோ டான்சர் படம் சக்கை போடு போட்டது. வெளிநாடுகளில் 12 கோடி டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. வெளிநாடுகளில் மட்டும் 94.28 கோடியை டிஸ்கோ டான்சர் படம் வசூலித்தது. அதாவது, மொத்த வசூல் 100.68 கோடி ஆகும்.
முன்னதாக 1975 -ஆம் ஆண்டு ரமேஷ் சிப்பியின் இயக்கத்தில் வெளி வந்த ஷோலே படமும் சக்கை போடு போட்டது. அமிதாப்பச்சன், தர்மேந்திரா நடித்த இந்த படம் நட்புக்கு உதாரணமாக பார்க்கப்பட்டது.
ஆனால், ஷோலே படம் உலகம் முழுவதும் 30 கோடியைதான் வசூலித்திருந்தது. இதை விட மும்மடங்கு வசூல் செய்து சாதித்தது மிதுன் சக்கரவர்த்தியின் டிஸ்கோ டான்சர் படம். இதே படம் தமிழில் நடிகர் நாகேஷ் தயாரிப்பில் பாடும் வானம்பாடி என்ற பெயரில் வெளியானது. இந்த படத்தில் நடிகர் ஆனந்த் பாபு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
அனுமதி இல்லாமல் திருச்சி எஸ்.பி-க்கு விளக்க கடிதம்: நாம் தமிழர் நிர்வாகி நீக்கம்!
நாளை முதல் தவெக கொடி பறக்கும்… விஜய் அறிவிப்பு!