தமிழ்நாட்டு மருமகளான மஞ்சிமா மோகன் யார்?

சினிமா

நடிகை மஞ்சிமா மோகனுக்கும், நடிகர் கவுதம் கார்த்திக்கிற்கும் இன்று காலை சென்னையில் திருமணம் நடைபெற்றது.
நண்பர்கள், மணமகன், மணமகள் ரத்த உறவுகள் மட்டும் எளிமையாக நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கேரளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மலையாளியான மஞ்சிமா மோகன் தமிழ்நாட்டு மருமகளாகியுள்ளார் .
தமிழ் சினிமாவில் 1980 களில் முன்னணி நாயகனாக நடித்து வந்த நடிகர் கார்த்திக்கின் மகன் தான் கெளதம் கார்த்திக்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தில் நாயகனாக அறிமுகமானார். தொடர்ச்சியாகத் தமிழ் படங்களில் நடித்து வரும் கௌதம் கார்த்திக்” தேவராட்டம்” படத்தில் நடித்தபோது அந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த மஞ்சிமா மோகன் இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டது.
இது சம்பந்தமாக ஊடகங்களில் செய்தி வெளியானபோது இருதரப்பும் அதனை மறுக்கவில்லை.
அதேசமயம் ஆதாரமில்லாமல் இதுபோன்ற செய்தியை வெளியிடாதீர்கள் என்று கூறிய மஞ்சிமா மோகன், கௌதம் கார்த்திக்கைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அறிவித்தார்.
கௌதம் கார்த்திக்கை மணம் முடித்திருக்கும் மஞ்சிமா மோகன் யார்?
கடந்த 1993-ம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் தேதி கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்தவர் . இவரது பெற்றோர் வைத்த பெயர் பிரியதர்ஷினி.
பின்னர் இவரது தாத்தா தான் மஞ்சிமா என்கிற பெயரை இவருக்கு சூட்டி உள்ளார். இவருடைய தந்தை மோகன் ஒளிப்பதிவாளர், இவரது தாய் கிரிஜா ஒரு நடனக்கலைஞர். இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள்.
பெற்றோர் இருவரும் சினிமாவில் பணியாற்றியவர்கள் என்பதால், அவர்களுடன் படப்பிடிப்பிற்குச்சென்ற மஞ்சிமாவுக்கும் சினிமாவின் மீது ஆசை வந்துவிட்டது.
கலியூஞ்சல் என்கிற மலையாள படத்தில் மூன்று வயது குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மஞ்சிமா, 2000-ம் ஆண்டு சூப்பர் கிட்ஸ் என்கிற குழந்தைகளுக்கான நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
அந்த நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால், இவருக்கு இளம் வயதிலேயே மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உருவானது. மறுபுறம் பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கியது.
திருவனந்தபுரத்தில் உள்ள நிர்மலா பவன் என்கிற பள்ளியில் தான் இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். பின்னர் சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார் மஞ்சிமா மோகன்.
சென்னையில் படித்ததால் தமிழில் நன்கு பேசத் தெரிந்த மஞ்சிமா மோகன் , 2015-ம் ஆண்டு வெளியான ஒரு வடக்கன் செல்பி என்கிற மலையாள படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அப்படத்தின் வெற்றிக்கு பின் தமிழில் கவுதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தேவராட்டம்.படத்தில் கவுதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்திருந்தார் . இப்படம் அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக அமைந்தது.
ஏனெனில் இப்படத்தில் நடித்த போது தான் கவுதம் கார்த்திக்கிற்கும், மஞ்சிமா மோகனுக்கும் இடையே காதல் மலர்ந்து இன்று திருமண உறவில் இணைந்து, தமிழ் சினிமா நட்சத்திர ஜோடி பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
குறிப்பாகத் தமிழ்நாட்டு மருமகளாகியுள்ளார் மஞ்சிமா மோகன்.
இராமானுஜம்

கனடாவில் கோர விபத்து: இந்திய மாணவன் பலி!

ஷ்ரத்தா பாணியில் அடுத்த கொலை: உடலை வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்த மனைவி!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *