இரண்டு மாதங்களுக்கு முன்பே ஜெயம் ரவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியானது. இன்ஸ்டாகிராமில் ஆர்த்தி ரவி, தனது கணவருடன் இருக்கும் அனைத்து போட்டோக்களையும் நீக்கி விட்டதால் பலரும் இது குறித்து சந்தேகித்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, மனைவியை பிரிவதாக அறிக்கை வெளியிட்டு, தகவலை உறுதிப்படுத்தினார் ஜெயம் ரவி . ஆனால், ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியோ தன்னை கேட்காமல் தனது கணவர் விவாகரத்து குறித்து அறிவித்து விட்டதாக ஒரு அறிக்கை வெளியிட்டார்.
ஜெயம் ரவி-ஆர்த்திக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம், ஒரு பிரபல பாடகி என்கிற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஜெயம் ரவி, கடந்த 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு, அடிக்கடி கோவாவுக்கு செல்ல தொடங்கியுள்ளார். அதன் பின்னணியில் பாடகி ஒருவர் இருந்துள்ளார். அவர்தான் கென்னிஷா பிரான்சிஸ்.
கென்னிஷாவுடன் பழக தொடங்கியதில் இருந்து , அவர் சொல்படிதான் ஜெயம் ரவி கேட்டு நடப்பதாக சொல்லப்படுகிறது. கென்னிஸ் கூறியபடிதான் ஆர்த்தியிடம் கூட விவாதிக்காமல் விவாகரத்து அறிவிப்பை ஜெயம் ரவி வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் கோவாவில் ஜெயம் ரவிக்கு சொந்தமான காரை கென்னிஷா ஓட்டி சென்றுள்ளார். இந்த காரில் கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ள டிண்ட் ஸ்டிக்கர் தடிமனாக இருந்த காரணத்தினால், கோவா போலீசார் கென்னிஷாவுக்கு அபராதம் விதித்துள்ளனர். பின்னர், அதே காரை ஜெயம் ரவியும் வேகமாக ஓட்டி சென்று போலீசாரிடத்தில் சிக்கியுள்ளார். இந்த இரு சலான்களும் தற்போது கிடைத்துள்ளன.
கென்னிஷா பிரான்சிஸ் என்ற பெயரை கேட்டதும் பலரும் கோவாவை சேர்ந்தவர் என்று கருதி கொள்கின்றனர். ஆனால், இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்தான். அதோடு,கென்னிஷா ஜெயம் ரவிக்கு அறிமுகமானது எப்படி என்று பார்க்கலாம்.
நடிகர் ஜீவாவின் ‘டெஃப் ஃப்ராக்ஸ்’ ரெக்கார்ட்ஸ் மியூசிக் லேபிள் நிறுவனத்தின் கீழ் கடந்த 2020 ஆம் ஆண்டு கென்னிஷாவின் ‘இதை யார் சொல்வாரோ’ என்ற பாடலை நடிகர் ஜெயம் ரவிதான் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியின் போது, ஜெயம் ரவி கென்னிஷாவை நன்றாக கவனித்து கொண்டாராம். அப்போது, ஜெயம்ரவி ஸ்வீட் என்றும் மிக நல்ல மனிதர் என்று கென்னிஷா கூறியிருந்தார்.
பின்னர், பிரபல மியூசிக் சேனல் ஒன்றிடம் பேசிய போது பல விஷயங்களை கென்னிஷா பகிர்ந்து கொண்டார். கென்னிஷா பிரான்சிஸ் கோவா, மும்பையில் வசித்தாலும் சுத்தமான தமிழ் பொண்ணுதான் என்று தன்னை கூறிக் கொள்கிறார். நன்றாக தமிழும் பேசுவார். அதோடு, லைசென்ஸ் பெற்ற சைக்காலஜிஸ்ட்டும் கூட. இப்போது, ஜெயம் ரவியை ஸ்வீட் என்று கூறி அந்த ஸ்வீட்டை கென்னிஷா கைப்பற்றிக் கொண்டதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
குக் வித் கோமாளி மணிமேகலை பற்றி அதிர்ச்சி தகவல்கள்… வீடியோ வெளியிட்டு நீக்கிய நடிகர்!
வெப்பம் நீடிக்குமா? மழை குளிர்விக்குமா? வானிலை மைய அப்டேட் இதோ!