ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி இந்த மாநிலத்துக்காரரா?

Published On:

| By Kumaresan M

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன் மனைவி சாயிரா பானுவை பிரிவதாக அறிவித்துள்ளார்.

குடும்பத்தினர் பார்த்து நடத்தி வைத்த திருமணம் இதுவாகும். 29 ஆண்டு கால இல் வாழ்க்கை இப்போது முடிவுக்கு வந்துள்ளது. பின்னணி என்ன காரணமாக இருக்கும் என்று ஆராய தேவையில்லை. பிரிவதும் கூடுவதும் தனி மனித உரிமை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இந்த நிலையில், நஸ்ரின் முன்னி கபிர் எழுதிய ஸ்பிரிட் ஆப் மியூசிக் என்ற புத்தகத்தில் சில அரியத் தகவல்களை ஏ.ஆர். ரஹ்மான் கூறியிருக்கிறார். அதில், அவர் கூறியிருப்பதாவது, “நான் இசையமைக்கும் போது பல பெண்களை பார்த்துள்ளேன். ஆனால், நான் ஷை டைப் என்பதால் அவர்களிடத்தில் அவ்வளவாக பேசுவதில்லை.

அதே வேளையில், எனக்கு 27 வயதானதும்  செட்டிலாக வேண்டும் என்று நினைத்தேன். தொடர்ந்து, தாயிடத்தில் எனக்கு ஒரு பெண்ணை பார்க்க சொன்னேன். 1995 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி  எனது பிறந்த நாளில்  முதன் முதலில் சாயிரா பானுவை பார்த்தேன்.

பார்த்ததும் பிடித்துப் போனது. மிகவும் பணிவாக இருந்தார். ரொம்ப ஜென்டிலாக தெரிந்தார். சில நாட்கள் போனில் பேசினோம். பின்னர், என்னை திருமணம் செய்ய சம்மதமா? என்று அவரிடத்தில் கேட்டேன். ஆனால், அவர் பதில் அளிக்கவில்லை. அமைதியாக இருந்தார். தொடர்ந்து,1995 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி எங்களின் திருமணம் நடந்தது” என்று கூறியுள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மானின் மனைவி சாயிரா பானு சென்னையில் வசித்தாலும் தாய் மொழி குஜராத்தி ஆகும். குஜராத் மாநிலத்தில் கட்ச் பகுதியை சேர்ந்தவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

இதுக்கு என்டே கிடையாதா? – மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!

அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,110 கோடி லஞ்சம் … அதானி மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றச்சாட்டு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share