வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து இருந்த கோட் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கோட் படத்தில் வரும் கிரிக்கெட் போட்டி நடைபெறும் காட்சியில் சென்னை அணி கேப்டன் தோனியை நிஜத்திலேயே நடிக்க வைக்க முயற்சித்தாராம் வெங்கட் பிரபு.
போட்டி தொடங்கும் முன்பு விஜய், அவருக்கு வாழ்த்து சொல்வது போல அந்த காட்சி எடுக்க இருந்தாராம். கோட் பட ஷூட்டிங் நடைபெற இருந்த நாளில், ஏற்கனவே தோனி மற்ற நிகழ்ச்சிகளுக்காக தேதி ஒதுக்கிவிட்டதால் தோனியால் நடிக்க முடியாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகி அரசியலில் கவனம் செலுத்தவுள்ளார். கட்சி அறிவிப்பு, கொள்கை அறிவிப்பு, கொடி அறிமுகம் அனைத்தும் நடந்து முடிந்து விட்டது.
கடைசி படமான தளபதி 69 படத்தை முடித்து கொடுத்து விட்டு தீவிர அரசியலில் விஜய் ஈடுபடுகிறார். அவரது கட்சியின் மாநாடும் விரைவில் நடைபெற போகிறது. விஜய் அரசியல் பக்கம் ஒதுங்கினாலும் அவரது மகன் ஜேசன் சஞ்சய் விஜய் ரசிகர்களின் சினிமா வடிகாலுக்கு ஆறுதலாக இருப்பார் என்று எதிர்பார்க்கலாம். ஆனால், ஜேசன் சஞ்சய் நடிப்பு பக்கம் வரப் போவதில்லை. படங்களை மட்டுமே இயக்க போகிறார்.
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனம் தயாரிப்பில் படம் இயக்கப் போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. ராயன் படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமான நடிகர் சந்தீப் கிஷன் தான், சஞ்சய் இயக்கும் படத்தின் ஹீரோ என தகவல் வெளியாகியுள்ளது. ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
டைவர்சுக்கு பிறகும் விடாது கறுப்பு… முன்னாள் கணவரை வச்சு செய்யும் துபாய் இளவரசி!
மகாவிஷ்ணுவை போலீஸ் கஸ்டடியில் எடுக்க நீதிமன்றத்தில் மனு!