அந்த ஒரு நடிகர்தான் தமிழ் சினிமாவில் பெண்களை திரும்பி பார்க்காதவர்… யாரை சொல்கிறார் நடிகை விசித்ரா

சினிமா

சமீபத்தில் வெளியான ஹேமா அறிக்கை கேரள திரையுலகை புரட்டிப் போட்டுள்ளது.

அந்தக் கமிட்டியிடம் பேசிய பெண் கலைஞர்கள் தங்களுக்கு பாலியல் தொல்லை நடந்திருப்பதாக கூறியிருக்கிறார்கள்.

இதனையடுத்து கேரள நடிகர் சங்கமான அம்மா அமைப்பு கூண்டோடு கலைக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து,  அந்த அமைப்பின் தலைவரான மோகன்லால் முதுகெலும்பு இல்லாதவர் என்று பல நடிகைகள் குறை கூறியிருந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து தமிழ் சினிமா நடிகர்கள், நடிகைகளிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டுவருகின்றன.

கடந்த 2000 ஆம் ஆண்டு நடிகை விசித்ராவுக்கும் நடிகர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.

அதே போல, ஸ்ட்ண்ட் நடிகர் ஒருவரும் தன்னிடத்தில் தவறாக நடந்து கொண்டதாகவும் நடிகை விசித்ரா குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த இரு சம்பவங்களிலுமே தனக்கு நியாயம் கிடைக்கவில்லை. தன்னை நடிகர் சங்கம் கை விட்டு விட்டதாகவும் விசித்ரா குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், கலாட்டா மீடியாவுக்கு பேட்டியளித்துள்ள நடிகை விசித்ரா, தமிழ் திரையுலகில் தான் பார்த்த வகையில், நடிகர் டி.ராஜேந்தர் ஒருவர்தான் தங்கமான குணம் கொண்டவர். பெண்களை நடத்தும் விதத்திலோ மரியாதை கொடுப்பது பற்றியோ அவரை ஒரு போதும் குறை சொல்லவே முடியாது என்று தெரிவித்துள்ளார்.

அது போல, நடிகர் பிரபுவும் தன்மையான குணம் கொண்டவர். மரியாதையுடன் பழகுபவர் என்று விசித்ரா குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் டி.ராஜேந்தர் படங்களில் கூட நடிகைகளை தொட்டு நடிக்காதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

வெறுத்து ஒதுக்கிய பெயர்… தவிர்க்க முடியாததாக மாறியது எப்படி? – மம்முட்டிக்கு 73 வயது!

இந்த வார OTT ரிலீஸ் : பேட் பாய்ஸ் முதல் கில் வரை!

+1
2
+1
1
+1
0
+1
3
+1
1
+1
7
+1
4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *