கோட் படத்தின் ஹீரோ விஜய்… இன்னொரு ஹீரோவும் இருக்காரு… யார் தெரியுமா?

சினிமா

இயக்குநர் வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் அதிகம் கவனிக்கப்படும் இயக்குநர்களில் ஒருவராக மாறியுள்ளார்.

ஒவ்வொரு படத்திலும்  வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டு படங்களை இயக்கி கைதட்டல்களை பெறுவதும் இவரின் வாடிக்கை. வெங்கட்பிரபு இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள படம் தி கோட்.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.கோட் படத்தின் டிக்கெட்டுக்கு ஏற்பட்டுள்ள டிமாண்ட் காரணமாக தியேட்டர்கள் காட்சிகளை  அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. உலகம் முழுக்க 5 ஆயிரம் ஸ்கிரீன்களில் இந்த படம் வெளியாகப் போகிறது.

ஏஜிஎஸ் நிறுவனம் கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் பொருட் செலவில் இந்த படத்தை தயாரித்துள்ளது. இதில், நடிகர் விஜய்க்கு மட்டும் 200 கோடி சம்பளம் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் விஜய்யுடன் சேர்ந்து பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.படம் இன்னும் இரு நாட்களில் வெளிவரவுள்ள நிலையில், ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இயக்குநர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா, பிரேம்ஜி என படத்துடன் தொடர்புடைய பலரும் இண்டர்வியூ கொடுத்து வருகிறார்கள். படத்துக்கு   யுவன் அமைத்த பின்னணி இசை குறித்து முதல் முறையாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்தை பார்த்த விஜய், GOAT படத்தில் யுவன் ‘பின்னிட்டான்யா’ என்று மனம் திறந்து வெங்கட்பிரபுவிடம் கூறியுள்ளார்.

இந்த ஒற்றை வார்த்தையால் வெங்கட் பிரபுவும் யுவனும் அகமகிழ்ந்து போனார்களாம்.  படத்துக்கு ஒரு ஹீரோ நடிகர் விஜய் என்றால் மற்றொரு  ஹீரோ யுவன்தான் என்று மெச்சுமளவுக்கு பின்னணி மற்றும் பாடல்களில் யுவன் திறமை காட்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

நடிகை ரீமா கல்லிங்கல் நடத்தும் பார்ட்டி… எத்தனை இளம் பெண்கள்… பாடகி சுசித்ரா வீசும் குண்டு!

சீமான் மீதான எஸ்சி/எஸ்டி வழக்கு : விசாரணை அதிகாரி நியமனம்!

 

+1
0
+1
0
+1
0
+1
6
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *