தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராகிறார் என்றும் அவர் இயக்கும் முதல் படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்க போவதாகவும் அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து அப்படம் பற்றிய எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை.
கதாநாயகன் யார் என்பதை இன்றுவரை தீர்மானிக்கவில்லை என்கிறார்கள். காரணம் ஜேசன் சஞ்சய் சொன்ன கதையில் முன்னணி நாயகர்கள் உட்பட யாரை வேண்டுமானாலும் நடிக்க வைக்கலாம் என்பதால் தயாரிப்பு நிறுவனம் நீங்கள் எந்தக் கதாநாயகனைத் தேர்வு செய்தாலும் எங்களுக்குச் சம்மதம் என கூறியிருக்கிறார்கள்.
ஜேசன் சஞ்சய் இந்தப்படத்துக்கு முன்னணி நாயகர்கள் வேண்டாம். மூன்று கதாநாயகர்களின் பெயர்களைச் சொல்லி இவர்களில் ஒருவர் இருந்தால் போதும் என்று சொல்லியிருக்கிறார். அவர் கூறிய பெயர்களை கேட்ட லைகா நிறுவனத்தினர் ஆச்சரியத்திற்குள்ளாகியுள்ளனர்.
காரணம் ஜேசன் சஞ்சய் குறிப்பிட்ட அதர்வா, கவின், துருவ் விக்ரம் இவர்களுக்கு என்று குறிப்பிட்ட வியாபாரம் இல்லை. இருந்தபோதிலும் கதை மீது கொண்ட நம்பிக்கையில் இவர்களில் ஒருவரை ஒப்பந்தம் செய்யச் சொல்லியிருக்கிறார். அதனால் இவர்களில் யாருடைய தேதிகள் ஒத்துவருகிறதோ? அவரை நடிக்க வைக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இவர்களிடம் கதை சொல்லும் வேலை நடந்துவருகிறது. எந்த கதாநாயகன் தேதி கிடைக்கிறதோ அவரை வைத்துப் படப்பிடிப்பு தொடங்குவது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.
இராமானுஜம்
எடப்பாடி பக்கத்தில் பன்னீரா? சபாநாயகரிடம் மீண்டும் முறையிட்ட அதிமுக