நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்த நிலையில், அதுபற்றி தனக்கு ஏதும் தெரியாது என மனைவி ஆர்த்தி ரவி இன்று (செப்டம்பர் 11) அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விவாகரத்து விவகாரத்தில் மனைவியிடம் எதுவும் கேட்காமல், ஜெயம் ரவி அவசர முடிவை எடுத்து தன்னிச்சையாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், ஆர்த்தி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆர்த்தி ரவி என்றே குறிப்பிடப்பட்ட அறிக்கையில் பல விஷயங்களை அவர் தெரிவித்துள்ளார்.
அதில், ஜெயம் ரவி வெளியிட்ட விவாகரத்து அறிவிப்பை பார்த்து அதிர்ச்சியாகியுள்ளேன். எனக்கு இதுபற்றி எதுவுமே தெரியப்படுத்தவில்லை. ஜெயம் ரவி மட்டுமே தனிப்பட்ட முறையில் இந்த முடிவை எடுத்துள்ளார். இது எனக்கு கவலையை அளித்துள்ளது. நான் என்னுடைய இரு மகன்களின் வருங்காலத்தை நினைத்துக் கவலைப்படுகிறேன்.
எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு குறித்து ஜெயம் ரவியிடம் பேச முயற்சித்த போது, அவர் வாய்ப்பே வழங்க வில்லை. மாறாக இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது, சமூக வலைதளங்களில் என்னை பற்றியும் என் குடும்பத்தை பற்றியும் தவறான தகவல்கள் பரவவும் காரணமாக அமைந்து விட்டது. ஜெயம் ரவி இப்படி செய்வார் என கொஞ்சமும் நினைத்து பார்க்கவில்லை. 18 வருடங்கள் வாழ்க்கை முற்றிலுமாக உடைந்து போய் விட்டது என்று உருக்கமாக ஆர்த்தி கூறியுள்ளார்.
நடிகர் ஜெயம் ரவி, எவ்வளவு பிஸியாக நடித்து வந்தாலும் தன்னுடைய குடும்பம் மற்றும் மனைவி மீது அதிக அக்கறை கொண்டவர் என்றே அறியப்பட்டிருந்தது. ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை காதலித்து கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு ஆரவ் மற்றும் அயான் என இரண்டு மகன்களும் உள்ளனர். கடந்த ஒரு வருடமாகவே ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவி ஜோடிக்கு இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளது. அது, இப்போது வெடித்து விட்டது.
ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, பிரபல சின்னத்திரை தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் ஒரே மகள் ஆவார். ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார், ‘சுஜாதா ஹோம் மூவி மேக்கர்ஸ்’ என்கிற நிறுவனத்தின் மூலம், ஏராளமான சீரியல்களை தயாரித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
திடீரென உயர்ந்த தங்கம் விலை…நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் பணி!