நேற்று (ஏப்ரல் 14) தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு விஜய் நடிப்பில் உருவாகி வரும் The Greatest Of All Time படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி இருக்கிறது.
‘விசில் போடு’ என்று தொடங்கும் இப்பாடல் முழுக்க, முழுக்க மதுபான பார் பின்னணியில் படம் பிடிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது வரை யூடியுபில் 25 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை இப்பாடல் பெற்றுள்ளது.
பாடலின் தொடக்கத்தில் பிரச்சாரம் செய்யப்போகிறேன் என்பது போல வரிகள் இடம்பெற்றுள்ளன. பின்னர் அதை மாற்றி ஷாம்பெயின் என்று விஜய் பாடுகிறார். பாடலில் விஜய், பிரபுதேவா, பிரஷாந்த் ஆகியோருடன் அஜ்மலும் இடம் பெறுகிறார்.
பாடல் நன்றாக இருப்பதாக விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
இந்தநிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த பாடலை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. தோனியுடன் சென்னை வீரர்களும், ரசிகர்களும் இந்த எடிட்டில் இடம்பெற்று உள்ளனர்.
நேற்று நடைபெற்ற போட்டியில் வான்கடேவில் வைத்து மும்பையை, சென்னை சம்பவம் செய்தது. இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக சென்னை அணி விஜய் பாடலை வைத்து வீடியோ வெளியிட்டு இருக்கிறது.
முன்னதாக ஐபிஎல் பயிற்சிக்காக தோனி சென்னை வந்தபோது, லியோ படத்தின் Bad Ass பாடலில் தோனியை வைத்து எடிட் செய்து, சென்னை அணி வீடியோ வெளியிட்டது. அந்த வீடியோ இணையத்தை தெறிக்க விட்டது.
https://twitter.com/ChennaiIPL/status/1779850654007140745
தற்போது விசில் போடு பாடல் கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், சென்னை அணி இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளது.
இதனால் வரும்நாட்களில் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Thalapathy 69: இயக்குனர் இவரா?.. ‘GOAT’ தயாரிப்பாளர் மேடையில் பேசிய Video வைரல்…!
பிரபல சீரியல் ஹீரோயினுக்கு திருமணம் முடிந்தது… வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்…!
Video: நொடிக்கு நொடி பரபரப்பு… விஷாலின் ‘ரத்னம்’ ட்ரெய்லர் பக்கா மாஸ்..!