பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. விஷ்ணு முதல் போட்டியாளராக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
இதனால் அவரைத்தவிர தினேஷ், அர்ச்சனா, மணி சந்திரா, விஜய் வர்மா, மாயா, பூர்ணிமா, விசித்ரா ஆகிய 7 போட்டியாளர்களும் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்று உள்ளனர்.
இதற்கிடையில் வீட்டின் கார்டனில் பண சூட்கேஸை வைத்து பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஆசை காட்டி வருகிறார்.
பணத்தின் மதிப்பினை திடீரென உயர்த்தியும், குறைத்தும் பிக்பாஸ் போட்டியாளர்களின் மன வலிமையை பரிசோதித்து வருகிறார்.
இந்த நிலையில் சூட்கேஸில் வைக்கப்பட்டு இருந்த ரூபாய் 12 லட்சம் பணத்தினை எடுத்துக்கொண்டு, போட்டியாளர் ஒருவர் வீட்டில் இருந்து வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அதன்படி மாயா அல்லது விசித்ரா இருவரில் ஒருவர் தான் அந்த மணி சூட்கேசை எடுத்துக்கொண்டு வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது.
இறுதிப்போட்டிக்கு முன்னேறினாலும் எப்படியும் நாம் டைட்டில் வின்னர் ஆகப்போவதில்லை என எண்ணி இந்த முடிவை அவர்கள் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் பிக்பாஸ் தரப்பில் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பாராததை எதிர்பாருங்கள்!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
நயன்தாராவின் தந்தையாக நடிக்கும் சீமான்? விக்னேஷ் சிவன் பிளான்!
திடீர் மாற்றம்: புத்தகக் காட்சியை துவக்கி வைக்கும் அமைச்சர் உதயநிதி