பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது மாயா, பூர்ணிமா, விசித்ரா, நிக்ஸன், விஷ்ணு விஜய், விஜய் வர்மா, அர்ச்சனா, தினேஷ், மணி சந்திரா மற்றும் ரவீனா ஆகியோர் வீட்டுக்குள் உள்ளனர்.
இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனால் ரவீனா, விஜய் வர்மா இருவரும் வீட்டை விட்டு வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் அதிக சம்பளம் வாங்கும் நபர் யார்? என்பது குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.
அந்த வகையில் நடிகை விசித்ரா தான் அதிக சம்பளம் வாங்கும் போட்டியாளராக இருக்கிறார். இவர் நாளொன்றுக்கு ரூபாய் 40 ஆயிரம் சம்பளமாக பெறுகிறார்.
பொதுவாக வயதில் மூத்த நடிகர், நடிகை யாரேனும் பிக்பாஸில் என்ட்ரி ஆனால் முதல் வாரத்திலேயே அவர்கள் பலிகடா ஆக்கப்படுவர்.
ஆனால் விசித்ரா தற்போது 85 நாட்களை கடந்தும் பிக்பாஸில் தாக்குப்பிடித்து மற்றவர்களுக்கு கடும் போட்டியை அளித்து வருகிறார்.
இதனால் அவர் டைட்டில் வெல்லாவிடினும் கூட வெளியே செல்லும் போது கணிசமான தொகை ஒன்றினை எடுத்து செல்வார்.
இதனால் டாப் 5 போட்டியாளர்களில் பட்டியலில் விசித்ராவும் இடம் பிடித்தால், பிக்பாஸ் வின்னருக்கு கிடைக்கும் பரிசுத்தொகையை விடவும் அதிக பணம் விசித்ராவுக்கு கிடைக்கும்.
இது நடந்தால் பிக்பாஸ் நிகழ்ச்சி வரலாற்றில் அதிக சம்பளம் பெற்ற நபர்கள் பட்டியலில் முதல் இடம் அவருக்கு கிடைக்கக்கூடும்.
அதேபோல குறைந்த சம்பளம் வாங்கிய போட்டியாளராக சரவண விக்ரம் இருக்கிறார். இவருக்கு நாளொன்றுக்கு ரூபாய் 18 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
குறைவான சம்பளம் என்றாலும் கூட 80 நாட்களுக்கு மேல் இருந்ததால் விக்ரமும் ஒரு கணிசமான தொகையினை எடுத்து சென்றுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மஞ்சுளா
விசாரணைக்கு ஆஜராகாத ED அதிகாரிகள்: போலீஸ் எடுத்த முக்கிய முடிவு!
தூத்துக்குடியில் நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு!