பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் யாரும் எதிர்பாராத வகையில், முக்கிய போட்டியாளர் ஒருவர் வெளியேறி இருக்கிறார்.
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் தினேஷ், விசித்ரா, மணி சந்திரா, அர்ச்சனா, பூர்ணிமா, மாயா மற்றும் விஜய் வர்மா ஆகியோர் நாமினேட் செய்யபட்டனர்.
யாரும் எதிர்பாராவிதமாக பூர்ணிமா பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறினார். இதையடுத்து டபுள் எவிக்ஷன் தற்போது சிங்கிள் எவிக்ஷன் ஆக மாறியுள்ளது.
அந்த வகையில் மிகவும் வலிமையான போட்டியாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த விசித்ரா, தற்போது வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.
மாயா, விஜய் வர்மா, விசித்ரா மூவரும் குறைவான வாக்குகளை பெற்றிருந்தனர். இதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாயாவை மீண்டும் ஒருமுறை தக்கவைத்து விசித்ராவை பிக்பாஸ் வெளியேற்றி இருக்கிறார்.
இதைப்பார்த்த ரசிகர்கள்,”மாயாவைக் காப்பாற்ற ஒவ்வொரு வாரமும் மற்ற போட்டியாளர்களை பலிகடா ஆக்குகிறீர்கள்,” என சமூக வலைதளங்களில் காட்டமாக பிக்பாசை விமர்சித்து வருகின்றனர்.
இறுதிப்போட்டிக்கு முன்னர் ஒரு மிட் வீக் எவிக்ஷன் இருக்கும், என்பதால் அதில் விஜய் வர்மாவை வெளியேற்றலாம் என்பது பிக்பாஸின் திட்டமாக உள்ளது.
இதனால் விஷ்ணு விஜய், தினேஷ், மாயா, மணி சந்திரா மற்றும் அர்ச்சனா ஆகிய ஐவரும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
இந்த ஐந்து பேரில் டைட்டில் வெல்லப்போகும் அந்த ஒரு போட்டியாளர் யார்? என்பதை வழக்கம் போல நாம் காத்திருந்து பார்க்கலாம்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தயாரிப்பாளர் சங்கத்தை தற்காலிகமாக காப்பாற்றிய கலைஞர் 100 விழா!
பூர்ணிமா பிக்பாஸில் சம்பாதித்த… மொத்த தொகை எவ்வளவு தெரியுமா?