சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு தேதியினை படக்குழு இன்று (ஆகஸ்ட் 18) மாலை அறிவித்துள்ளது.
கெளதம் மேனன் இயக்கத்த்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. மாநாடு படத்தினை தொடர்ந்து செப்டம்பர் 15ம் தேதி வெளியாகும் நடிகர் சிம்புவின் இந்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தில் இதுவரை ’காலத்துக்கும் நீ வேணும்’, ’மறக்குமா நெஞ்சம்’ என்ற இரு பாடல்களின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்நிலையில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் முக்கியமான அடுத்த அப்டேட்டினை வீடியோவாக படத்தை தயாரித்துள்ள வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா செப்டம்பர் 2-ஆம் தேதி மாலை 5 மணி முதல் சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளள்ளது.
மேலும் அந்த விழாவில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் விருந்தாக ஏ.ஆர். ரஹ்மானின் நேரடி இசை நிகழ்ச்சியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
‘வெந்து தணிந்தது காடு’ : சிம்பு படத்தின் புது அப்டேட்!