குணா குகையை தழுவி எடுக்கப்பட்ட ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் தற்போது ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகிறது. நட்பை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தினை 2கே கிட்ஸ் வெகுவாகக் கொண்டாடி வருகின்றனர்.
கமலின் ‘குணா’ படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு’ பாடலும், அதை படத்தில் பயன்படுத்திய விதமும் தான் மஞ்சுமெல் பாய்ஸின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு படம் 1௦௦ கோடி கிளப்பில் இணைந்ததை படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு அறிவித்து இருந்தனர்.
இந்தநிலையில் இப்படத்தின் ஓடிடி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அமேசான் பிரைம், நெட் ஃபிளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனங்கள் இடையே நடந்த ரேஸில் ஹாட் ஸ்டார் நிறுவனம் இப்படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றி விட்டதாம்.
விரைவில் இதுகுறித்த அறிவிப்பினை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என கூறப்படுகிறது. அதோடு ஏப்ரல் 2-வது வாரத்தில் இப்படத்தினை தளத்தில் வெளியிடவும் அந்நிறுவனம் முடிவெடுத்து இருக்கிறதாம்.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் ரிலீஸிற்கு முன்னர் இப்படத்தின் ஓடிடி உரிமையினை வாங்கிட எந்த தளமும் ஆர்வம் காட்டவில்லையாம். ஆனால் இப்போது பாக்ஸ் ஆபிஸில் படம் சக்கைப்போடு போடுவதால், ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தின் ஓடிடி உரிமையானது அடிப்படை தொகையில் இருந்து பன்மடங்கு விலை போயிருக்கிறது.
‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பால் தமிழைத் தொடர்ந்து, தெலுங்கிலும் இப்படத்தினை நேரடியாக வெளியிட படக்குழு முடிவெடுத்து அதற்கான பேச்சுவார்த்தைகளை தற்போது நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரதமர் மோடி ஆட்சியில் பெண்கள் முன்னேற்றம்: ஆளுநர் ரவி
உச்சம் தொட்ட தங்கம்… இதுக்கு ஒரு எண்டு கெடையாதா?
“96” படத்தில் இளையராசாவின் ஒரு சில ஹிட் பாடல்களின் க்ளிப்ஸ்கள் வந்த போது அவர் சற்று காட்டமாகவே விமர்சித்து இருந்தார். இப்படத்திலும் அது போலவே ஒரு சில க்ளிப்ஸ்கள் வருகின்றன. இதற்கும் ஏன் அன்று போல எந்தவித காட்டமான விமர்சனமும் அவரிடமிருந்து இது வரை வரவில்லை?