விஜய் சேதுபதி, காத்ரீனா கைஃப் இணைந்து நடிக்கும் ‘Merry Christmas’ படத்தின் போஸ்டர் வெளியானது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் பாலிவுட்டிலும் தற்போது நடித்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் உடன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் ‘Merry Christmas’ படத்தின் போஸ்டர் வெளியானது.
2018-ல் தபு, ஆயுஷ்மான் குரானா மற்றும் ராதிகா ஆப்தே நடித்த ‘அந்தாதுன்’ படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இந்த படத்தை இயக்கி உள்ளார்.

ஸ்ரீராம் ராகவனின் அடுத்த திரில்லர் படமாக இந்த படம் உருவாகி உள்ளது. இத்திரைப்படம் இந்தி மற்றும் தமிழில் வெளியாக உள்ளது.
பாடல்களே இல்லாமல் வெறும் 90 நிமிடங்கள் மட்டுமே ஓடும் வகையில் உருவாகும் இந்த படம் மும்பை மற்றும் புனே பகுதியில் படமாக்கப்பட்டு உள்ளது.
இதுவரை நடிக்காத வித்தியாசமான கதாபாத்திரம் விஜய் சேதுபதிக்கு கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தை அடுத்த ஆண்டில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் படம் தியேட்டர்களில் வெளியாகும் என படக்குழு உறுதிபடுத்தியது.
இப்படம் டிசம்பர் மாதம் 25-ந்தேதி திரைக்கு வரும் என்று அறிவித்திருந்த நிலையில், படத்தின் தொழில் நுட்ப பணிகள் முடியாததாலும் திட்டமிட்ட தேதியில் வேறு படங்கள் திரைக்கு வருவதாலும் ஜனவரியில் தான் படம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
கலை.ரா