பிரசாந்த் நீல்-ஜூனியர் என்டிஆர்…படப்பிடிப்பு எப்போது?

Published On:

| By Jegadeesh

ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க உள்ள 31 ஆவது படத்தை ‘கே.ஜி.எஃப்’ படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அந்தப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் மார்ச் மாதம் தொடங்கும் என்ற அறிவிப்பு இன்று(மே20) வெளியாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜூனியர் என்.டி.ஆர்.

இவர் இன்று(மே20) தன்னுடைய 40 வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் பலரும் அவருக்கு தங்களின் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இதனிடையே, இவரின் பிறந்தநாளை தொடர்ந்து பிரபல இயக்குநர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் இவர் நடித்து வரும் படத்திற்கு ‘தேவரா’ என்று பெயர் வைக்கப்பட்டு இருப்பதாகவும்,

அந்தப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பான் இந்தியா படமாக வெளியாக உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கடலோரப் பின்னணியில் ஆக்‌ஷன் என்டர்டெய்னராக உருவாகி வரும் இதில் என்.டி.ஆர் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப்படத்திற்கு அடுத்தபடியாக ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க உள்ள 31 ஆவது படத்தை ‘கே.ஜி.எஃப்’ படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அந்தப்படத்தின் அப்டேட் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் இன்று(மே20) வெளியிட்டுள்ள பதிவில், இந்தப்படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் மார்ச் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதை சமூக வலைதளங்களில் ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


மு.வா.ஜெகதீஸ் குமார்

“பாசமா எல்லாம் வேஷம்” : மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்!

டாஸ்மாக்கில் ரூ.2000 நோட்டு வாங்க மறுப்பா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel