தென்னிந்திய சினிமாவில் பிரபல நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்தவர்கள் நாக சைதன்யா – சமந்தா. நாக சைதன்யா பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன் ஆவார். 10 ஆண்டுகள் காதலுக்குப் பிறகு 2017ஆம் ஆண்டு சைதன்யா- சமந்தா திருமணம் செய்து கொண்டனர். திருமணமான 4 ஆண்டுகளுக்குப் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.
விவாகரத்துக்கு பிறகு, சமந்தா உடல்ரீதியாக பாதிப்புக்குள்ளானார். தற்போது, அதில் இருந்து மீண்டு வருகிறார். இதற்கிடையே, சமந்தா விவகாரத்து பெற முன்னாள் தெலங்கானா அமைச்சர் கே.டி.ஆர்தான் காரணமென்று தெலங்கானா பெண் அமைச்சர் கொண்டா சுரேகா வைத்த குற்றச்சாட்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விவகாரத்துக்கு பிறகு, நடிகை சோபிதாவுடன் நாகசைதன்யாவுக்கு காதல் மலர்ந்தது. சோபிதா மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வானதியாக நடித்திருந்தார்.
நாக சைதன்யாவுடன் சோபிதா வெளிநாடுகளில் ஒன்றாகச் சுற்றும் புகைப்படங்களும் வெளியாகின. தொடர்ந்து, இருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெரியோர்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி நாகசைதன்யாவுக்கும் சோபிதாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது . சோபிதா துலிபாலா மற்றும் நாக சைதன்யா விரைவில் திருமணம் செய்ய உள்ள நிலையில், தற்போது அதற்கான சடங்குகள் தொடங்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினத்தில் உள்ள தனது வீட்டில் ஹல்தி கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள சோபிதா, திருமண கொண்டாட்டங்கள் தொடங்கி விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, பலரும் சோபிதாவுக்கும் நாகசைதன்யாவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். டிசம்பர் முதல் வாரத்தில் இவர்களின் திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஐஸ்வர்யா 40 வயதில் மீண்டும் கர்ப்பமா?- உண்மை என்ன?
போலீசார் முன்பு பம்மிய ஜோடி : நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு!