ஹிப்ஹாப் ஆதியின் ‘வீரன்’ ரிலீஸ் எப்போது?

சினிமா

ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடிக்கும் ’வீரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜூன்2, 2023 அன்று வெளியாக இருப்பதை தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .

ஹிப்ஹாப் தமிழா ஆதி மற்றும் ‘மரகத நாணயம்’ இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன் ஆகியோர் ஒன்றிணைந்திருக்கும் ‘வீரன்’ படத்தின் முதல் சிங்கிள் ‘தண்டர்காரன்’ வெளியாகி ஏற்கனவே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

அதோடு எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு குடும்ப பார்வையாளர்கள் மற்றும் இளைஞர்கள் என ரசிகர் பட்டாளம் இருப்பதால், படத்தில் அவரது இருப்பும், ஏ.ஆர்.கே.சரவணனின் புதுமையான கதைசொல்லலும் பார்வையாளர்களுக்கு ஒரு முழுமையான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் என்று படக்குழு நம்புகிறது.

When is hiphop adi veeran release

படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் ‘வீரன்’ படத்தை வழங்குகிறார். செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜூன் தியாகராஜன் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தை ஜி.சரவன் மற்றும் சாய் சித்தார்த் இணைந்து தயாரித்துள்ளனர். பிரபல விநியோக நிறுவனமான சக்தி ஃபிலிம் பேக்டரி தமிழ்நாடு திரையரங்கு வெளியீடு உரிமையை பெற்றுள்ளது.

இராமானுஜம்

உயர்நீதிமன்ற வளாகத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அதிரடி கைது!

மணிப்பூரில் சிக்கிய தமிழர்களை மீட்க முதல்வர் உத்தரவு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *