அண்மைக்காலமாக பிரபலங்களின் திருமண விழாக்கள் வியாபாரமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடிகை ஹன்சிகா மோத்வானியின் திருமண நிகழ்வை ஹாட்ஸ்டார் ஓ.டி.டி நிறுவனம் பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியிடுகிறது.
கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்ட நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதியினர் தங்களுடைய, திருமண விழாவின் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்தனர். அதுவும் 25 கோடி ரூபாய்க்கு அதன் உரிமை சென்றதாக தகவல்கள் கூறின.
நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வின் வியாபாரம் பல பிரபலங்களையும் திரும்பி பார்க்க வைத்தது.
அதன் விளைவாக ஆதி – நிக்கி கல்ராணி ஆகியோரின் திருமண உரிமையும் பெரும் தொகைக்கு விற்பனையானது.
இதேபோல் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நடிகை ஹன்சிகா, தன்னுடைய திருமண நிகழ்வின் உரிமையை ஹாட் ஸ்டார் நிறுவனத்திற்கு பெரும் தொகைக்கு விற்பனை செய்தார்.
ஹன்சிகா திருமண நிகழ்வின் உரிமையை கைபற்றிய ஹாட் ஸ்டார் நிறுவனம், Hanshika’s Love Shaadi Drama என்ற தலைப்பில் வரும் 10-ம் தேதி வெளியிடுகின்றனர்.
சாமானியர்கள் தங்கள் திருமணத்திற்காக பல லட்சம் கடன் வாங்கும் சூழலில் திரை பிரபலங்கள் தங்களின் திருமண நிகழ்வைகூட வியாபாரமாக்கி பல கோடிகள் சம்பாதிப்பதாக கூறுகின்றனர் இணையவாசிகள்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
தென்காசி கடத்தல் வழக்கு: இளம்பெண்ணை காப்பகத்தில் வைத்து விசாரிக்க உத்தரவு
ஆவின் பணி நியமனம்: தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!