When is Andrea's action movie releasing?

ஆண்ட்ரியாவின் ஆக்சன் படம் எப்போது ரிலீஸ்?

சினிமா

இயக்குனர் நாஞ்சில் இயக்கத்தில் நடிகையும் பின்னணி பாடகியுமான ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள படம் “கா”. இந்த படத்தில் வன விலங்குகளையும் பறவைகளையும் புகைப்படம் எடுக்கும் வைல்டு லைஃப் போட்டோகிராபர் கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ளார்.

நீண்ட நாட்களுக்கு முன்பே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடைந்து விட்டது ஆனால் ஏதோ சில காரணத்தினால் இந்த படம் வெளியாகாமல் தள்ளிப்போனது. 2022 ஆம் ஆண்டு “கா” படத்தின் டிரைலர் வெளியாகிவிட்டது. வனப்பகுதியில் வில்லன் கும்பலிடம் சிக்கிக் கொள்ளும் ஆண்ட்ரியா எப்படி அந்த பகுதியில் இருந்து தப்பிக்கின்றார் என்பதை அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த படமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் நாஞ்சில்.

இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா உடன் நடிகர்கள் சலீம் கோஷ், மாரிமுத்து, கமலேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஜான் மேக்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளார். சுந்தர் சி. பாபு இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த “கா” படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. வரும் மார்ச் 29ஆம் தேதி ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள “கா” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்த வெளியான தரமணி, வடசென்னை, அவள், அனல் மேலே பனி துளி ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் நிச்சயம் “கா” படத்திற்கும் மக்களின் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திக் ராஜா

முதியோர் உதவித்தொகை முறைகேடு : விசாரணை நடத்த அன்புமணி வலியுறுத்தல்!

ஹெல்த் டிப்ஸ்: உடல் பருமனைக் குறைக்க… இந்த உணவுகளைத் தவிருங்கள்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *