அஜித் 61 பட டைட்டில் அறிவிப்பு எப்போது?

தமிழ் திரையுலகை பொறுத்தவரை வருடத்திற்கு எத்தனை திரைப்படங்கள் வந்தாலும், எப்போதும் டிரெண்டிங்கில் இருப்பது தல தளபதியின் படங்கள் தான்.

சமூகவலைதளங்களில் இருவரின் ரசிகர்கள், அவர்கள் நடிப்பில் வெளிவர இருக்கும் படங்களை குறித்து கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

அதன்படி கடந்த 2 நாள்களாக அஜித் 61 படத்தின் டைட்டில் இதுதான் என சமூக வலைதளங்களில் ‘துணிவே துணை’ என்ற பெயர் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

நேர்கொண்டபார்வை, வலிமை படத்தை தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் அஜித் நடித்து வருகிறார். கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார்.

இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துவிட்டது. உலகின் பல பகுதிகளிலும் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நடிகர் அஜித், தற்போது இந்தியாவின் இமயமலை பகுதிகளில் உள்ளார்.

சமீபத்தில் கார்கில் நினைவிடம், பத்ரிநாத், கேதர்நாத் போன்ற கோவில் பகுதிகளுக்கு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் அஜித் 61 படப்பிடிப்பு மீண்டும் துவங்க உள்ளது. மீதமுள்ள மொத்த படப்பிடிப்பும் பாங்காக் மற்றும் தாய்லாந்து,ஆகிய இடங்களில் நடக்க உள்ளது. இதற்காக வரும் 23ம் தேதி அஜித் பாங்காங் செல்ல உள்ளார்.

இதற்கிடையே தான் அஜித் 61 படத்தின் டைட்டில் ‘துணிவே துணை’ என்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கெனவே துணிவே துணை தலைப்பில் 1976-ல் ஜெய்சங்கர் நடித்த படம் வெளியானது. ஆனாலும் அஜித் படத்துக்கு துணிவே துணை பெயர் வைப்பது உண்மையா என்பதை படக்குழுவினர் தரப்பில் உறுதிப்படுத்தவில்லை.

இன்றா? நாளையா?

பொதுவாக அஜித்தின் பட அப்டேட்கள் அவரது செண்டிமெண்ட்படி வியாழக்கிழமை தான் வெளியாகும். எனவே அஜித் 61 படத்தின் டைட்டிலை நாளை படக்குழு அறிவிக்க உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

அதேவேளையில் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சினிமா ஆர்வலர்கள் பலரும், அஜித் 61 டைட்டில் இன்று மாலை அறிவிக்கப்படும் என்று கூறிவருகின்றனர்.

இன்னும் படக்குழு தரப்பில் இருந்து அஜித் 61 டைட்டில் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. எனினும் இன்றோ நாளையோ அஜித் படத்தின் டைட்டில் வெளியாகிவிடும் என்ற உற்சாகத்தில் அவரது ரசிகர்கள் உள்ளனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

2 சிறுநீரகமும் செயலிழப்பு : உயிருக்கு போராடும் பிரபல நடிகர்!

ஆசியக் கோப்பை: இந்திய அணியின் வீராங்கனைகள் யார்?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts