மிரட்டும் வடிவேலு… கோபத்தில் உதயநிதி: மாமன்னன் போஸ்டரில் உள்ள குறியீடு என்ன?

சினிமா

பரியேறும் பெருமாள், கர்ணன் என வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த திரைப்படம் ’மாமன்னன்’. இந்த படத்தில் கதாநாயகனாக உதயநிதிஸ்டாலினும், கதாநாயகியாக கீர்த்தி சுரேஷும் நடிக்கின்றனர்.

மேலும் முக்கிய வேடத்தில் நடிகர் வடிவேலு, பகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மே தினத்தில் (இன்று) அறிவிக்கப்படும் என்று கடந்த 29ஆம் அறிவிக்கப்பட்டது.

ஆனால் நேற்று இரவே ஒரு அசத்தலான போஸ்டர் வெளியானது. அதனை ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என பதிவிட்டு இயக்குநர் மாரி செல்வராஜ் அந்த போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

அதில் வேட்டி சட்டை அணிந்து கொண்டு அரசியல்வாதியாக, கையில் துப்பாக்கியும், கண்களில் காமெடிக்கு பதிலாக கொலைவெறியும் தெறிக்கும் வகையில் வடிவேலு தோற்றமளிக்கிறார்.

அதே போல மறுபக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் பட்டாக்கத்தியுடன் கோபமாக அமர்ந்துள்ளார். இந்த போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதற்கிடையே இதுதான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரா? அல்லது வேறு ஒரு போஸ்டர் வருமா? என கேள்வி எழுந்தது.

இந்நிலையில் மாமன்னன் படத்தின் புதிய போஸ்டரை மே தின வாழ்த்துகளுடன் படக்குழு இன்று (மே 1) வெளியிட்டுள்ளது.

அதில் வடிவேலு, உதயநிதியுடன், பகத் பாசிலும் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. வடிவேலும், பகத் பாசிலும் கருப்பு சட்டையில் கீழே பார்த்து கைகட்டியபடி நிற்க, உதயநிதி கருப்பு கோட் அணிந்து நிற்கிறார். இந்த போஸ்டரையும் தற்போது ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

தனது முந்தைய இரு படங்களிலும் சமூகத்தில் உள்ள சாதிய பிரிவினைகள் குறித்து அழுத்தமாக பேசியிருந்தார். இதனையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படம் அதே சாதிய பிரிவினைகளுடன் அரசியலையும் தீவிரமாக பேசும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என்றும் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை!

12 மணி நேர மசோதா வாபஸ்: சிஐடியு வரவேற்பு!

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

1 thought on “மிரட்டும் வடிவேலு… கோபத்தில் உதயநிதி: மாமன்னன் போஸ்டரில் உள்ள குறியீடு என்ன?

  1. கேவலமான தம்ப் நெயில் படு கேவலமான ரைட் அப்

Comments are closed.