பி.கே, சஞ்சு போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி. இவரது இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் நேற்று (டிசம்பர் 21) வெளியான படம் “டன்கி”. இந்த படத்தில் ஷாருக்கானுடன் நடிகை டாப்ஸி பன்னு, நடிகர் விக்கி கௌசல் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
எப்படியாவது வெளிநாடு சென்று விட வேண்டும் என நினைக்கும் இளைஞர்கள், வெளிநாடு செல்ல எடுக்கும் முயற்சிகளால் பல பிரச்சனைகளில் சிக்கிக் கொள்கின்றனர், அதிலிருந்து எப்படி அவர்கள் தப்பித்தார்கள், வெளிநாட்டுக்கு சென்றார்களா? இல்லையா? என்பதே இந்த படத்தின் கதை.
ராஜ்குமார் ஹிரானி மற்றும் ஷாருக்கான் முதன்முறையாக இணைந்து பணியாற்றி உள்ள டன்கி படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் பாசிடிவ் விமர்சனம் கிடைத்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் பதான், ஜவான் ஆகிய இரண்டு 1000 கோடி ரூபாய் வசூல் செய்த படங்களை தொடர்ந்து ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி உள்ள படம் என்பதால் டன்கி வசூல் விவரம் குறித்த தகவலை தெரிந்துக் கொள்ள அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் டன்கி படம் வெளியான முதல் நாளே 58 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக டன்கி படமும் 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
மீண்டும் இயக்குநராக களமிறங்கும் தனுஷ்… அப்டேட் வெளியானது!
5 நாட்களுக்கு பிறகு… திருச்செந்தூர் – தூத்துக்குடி பேருந்து சேவை தொடங்கியது!