‘லியோ’ போஸ்டர்கள் சொல்வது என்ன?

Published On:

| By Monisha

what is leo posters saying?

தமிழ் சினிமா வட்டாரம் மட்டுமல்ல சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் படம் லியோ. இந்தப் படம் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை படத்தை பற்றிய செய்திகள் எதாவது ஒரு வகையில் ஊடகங்களில் தினசரி இடம்பெற்று வருகிறது.

ஜெயிலர் படத்தின் வசூலை லியோ முறியடித்து முன்னேறுமா என்ற விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. திரைப்படத்தின் ஒருவரி கதை என்ன என்பதை சமகால இயக்குநர்கள் சிதம்பர ரகசியமாகவே வைத்துக்கொண்டுவருகின்றனர்.

அதனால் படத்தின் கதை என்ன என்பதை டிரைலரை வைத்து யூகிக்க வேண்டியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான அனைத்துப்படங்களும் போதைப்பொருள் கடத்தலை மையமாக கொண்ட ஒருவரி திரைக்கதையாகவே உள்ளது. லியோ படத்தின் கதையும் அதற்குள்ளாகவே இருக்கும் என அவரவர் யூகத்திற்கு ஏற்ப கதைசொல்லி வருகின்றனர்.

இந்த நிலையில் கன்னட, தெலுங்கு, தமிழ் என ஒவ்வொரு மொழிக்கும் தனிதனி போஸ்டரை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம்.

தெலுங்குபோஸ்டர்

முதலில் வெளியான தெலுங்கு போஸ்டரில், ‘KEEP CALM AND AVOID THE BATTLE’ என எழுதப்பட்டிருந்தது. அதற்கு தக்கவாறு சாந்தமான நாயகனின் புகைப் படம் கூலான காஷ்மீர் பின்னணியில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

கன்னட போஸ்டர்

துப்பாக்கிக்குள் படத்தின் நாயகன் விஜய் இருப்பது போன்ற போஸ்டரில் ‘KEEP CALM AND PLOT YOUR ESCAPE’ என்கிற வாசகம் இடம் பெற்றுள்ளது.

தமிழ் போஸ்டர்:

தமிழ் போஸ்டரில், ‘KEEP CALM AND PREPARE FOR BATTLE’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் கதாநாயகன் விஜய் கத்தியை கூர்தீட்ட தீப்பொறி பறக்கிறது.

தெலுங்கு, கன்னடம், தமிழ் போஸ்டர்களை ஒரு நேர்கோட்டில் வைத்துப் பார்த்தால் இயக்குநர் லியோ திரைக்கதையில் சொல்ல வருவது என்ன என்பதை யூகிக்க முடிகிறது. அமைதியான வாழ்க்கை அராஜகத்தால் பாதிக்கப்படும் போது எதிர்த்து நின்று போராட வேண்டும் என்பதை யூகிக்க முடிகிறது.

இராமானுஜம்

அண்ணா-தேவர்: அண்ணாமலை சொன்னது பொய்- ‘தி இந்து’ ஆதாரங்களோடு விளக்கம்!

கொடநாடு விமர்சனம்…  எடப்பாடி பற்றி பேச உதயநிதிக்குத் தடை: உயர் நீதிமன்றம்

நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம்: முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!

காவிரி விவகாரம்: மத்திய அமைச்சரை சந்தித்த கர்நாடக முதல்வர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment