கல்கி வெற்றி… கமல் சொன்னது என்ன?

சினிமா

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து ஜூன் 27 ஆம் தேதி வெளிவந்த ‘கல்கி 2898 கி.பி’ படத்தில் இரண்டாம் பகுதியில் நடிகர் அமிதாப்பச்சன், பிரபாஸ் இடையிலான சண்டை காட்சிகள் பிரதானமாக இருந்தது.

படத்தின் இறுதி காட்சியில் கமல்ஹாசன் தோன்றும் காட்சி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

கல்கி இரண்டாம் பாகத்தில் அமிதாப்பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோனே, கமல்ஹாசன் நால்வர் ஆதிக்கம் நிறைந்ததாக இருக்கும் என்பதை கமல்ஹாசன் தோன்றும் இறுதிக் காட்சியில் அவர் பேசிய வசனங்கள் உணர்த்துகிறது.

அதனாலேயே கல்கி இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Image

இந்தியன் – 2 திரைக்கு வந்த பின்பு கல்கி வசூல் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தெலுங்கு, இந்தி மொழிகளில் கல்கி படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளில் இந்தியன் – 2 வெளியீட்டால் வசூல் பாதிப்பு இல்லை என்கின்றனர்.

மூன்றாவது வாரத்தில் வெற்றி பெற்ற படத்திற்கு உரிய வசூல் இருந்து வருகிறது. 1000ம் கோடி ரூபாய் மொத்த வசூலை கடந்த நிலையில் அதில் நாயகனாக நடித்துள்ள பிரபாஸ், அமிதாப்பச்சன் இருவரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வீடியோ பதிவை வெளியிட்டுள்ளனர்.

அந்த வரிசையில் படக்குழு கமல்ஹாசன் பேசிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில், கமல்ஹாசனுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வருகிறது/ அதனை எடுத்து பேசாமல் துண்டித்து விட்டு, தெரியும், இது எதற்கு என்று.

கல்கி பெரிய ஹிட். இன்னொரு மெசேஜ் 300 கோடி, அப்புறம் 500 கோடி, 600, 700 அப்படி சொல்வாங்க. இது மகிழ்ச்சியான தருணம்.

நான் என்ன சொல்ல விரும்புறேன்னா, 250 படங்களுக்கு மேல நடிச்சிருக்கேன். அதுல ஒண்ணு ரெண்டு மோசமா இருக்கும். ஆனால், இந்தப் படம் மாதிரி எதுக்கும் ஒரு ‘அட்டென்ஷன்’ கிடைச்சதில்ல.

இப்படி கிடைக்கும் போது அதை கண்டிப்பா கொண்டாடணும். இது ஒரு அபத்தமான நிலை, நாம என்ன செய்றோம்னு நமக்குத் தெரியாது. ஆனால், அதை உள்வாங்கிக்கிறோம்.

இந்த யாஷ்கினை நாங்கள் சேர்ந்து செய்தோம். அவர் அதை செதுக்கினார், அவர் உளி கொண்டு வந்தார், நான் சுத்தியலை கொண்டு வந்தேன். நாங்கள் அந்த உருவத்தை வடித்தோம்.

 

இந்தப் படத்தில் நான் சிறிது நேரம் மட்டுமே வருகிறேன் என்று சொன்னார்கள். நான் கெட்டப்பைப் பார்த்தேன். அப்போது எனக்கு அசௌகரியம் ஏற்பட்டிருந்தால் அதிலிருந்து நான் நழுவி இருக்கலாம்.

ஆனால், போகப் போக எனக்கு உற்சாகமாக இருந்தது. இந்தியாவின் சில பெரிய நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். நாக் அஷ்வினுக்கு இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் போன்ற குழந்தை மனம் உள்ளது.

அது வளர்க்கப்பட வேண்டும். இரண்டாம் பாகத்தில் யாஷ்கினின் செயல்களை நீங்கள் பார்க்கலாம். வசூல் பற்றி நான் பேசப்போவதில்லை, மகிழ்ச்சி பற்றி பேச விரும்புகிறேன்.

கல்கியால் நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம், அதைக் கொண்டாடுகிறோம், தயவு செய்து எங்களுடன் நீங்களும் கொண்டாடுங்கள்” என்று பேசியுள்ளார்.

அமிதாப்பச்சன், பிரபாஸ், என முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர்களின் பெயர்களை குறிப்பிடாமல் “இந்தியாவின் சில பெரிய நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்து உருவாக்கி இருக்கிறார்கள்” என்பது பாராட்டா… இல்லை இயக்குநரை காட்டிலும் நட்சத்திர அந்தஸ்து உள்ள நடிகர்களால்தான் வெற்றி சாத்தியமானது என்கிறாரா?.

வழக்கம் போல கமல்ஹாசன் பேசுவது குழப்பமாக இருக்கிறது” என்கின்றனர் சினிமா வட்டாரத்தில்.

-இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

30 வயது பெண்ணாக இனி நடிக்கமாட்டேன்: நடிகை தபு

சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை: ஆதிக்கம் செலுத்துமா இன்ஃபோசிஸ்?

“இயக்குநருக்கு கதைப் பிடிப்பு ஹீரோயினுக்கு சதைப் பிடிப்பு” – பேரரசு சர்ச்சை பேச்சு!

காந்திபாபுவின் கம்பி கட்டும் கதை: ஏமாற்று வித்தைகளை அம்பலப்படுத்திய ‘சதுரங்க வேட்டை’!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *