கழிவறை , உடை மாற்றும் அறை கூட நடிகைகளுக்கு கிடையாது : அதிர வைக்கும் ஹேமா அறிக்கை

Published On:

| By Kumaresan M

மலையாள சினிமாவில் நடிகைகள் என்ன என்ன ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் என்று ஹேமா கமிஷன் பட்டியலிட்டுள்ளது. முக்கியமாக 17 பிரச்னைகளை நடிகைகள் எதிர்கொள்வதாக கூறப்பட்டுள்ளது. அவற்றை பார்க்கலாம்.

1. நல்ல ரோல்களில் அறிமுகமாக வேண்டுமென்றால் அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ஒப்புக் கொள்ள வேண்டும்.

2. பயணங்கள் மற்றும் தங்குமிடங்களில் பாலியல்ரீதியாக பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள்.

3. சம்மதிக்க மறுத்தால் மனரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள்.

4. கழிவறை, உடை மாற்றும் அறை என அடிப்படை வசதிகள் கூட அளிக்காமல் பெண்களை அடிமை போல நடத்துகிறார்கள்.

5. தங்குமிடங்களில் நடிகைகளுக்கு எந்த பாதுகாப்பும் இருப்பதில்லை.

6. சினிமாவுக்கு சம்ந்தம் இல்லாதவர்கள் மறைமுகமாக சினிமாவின் பல துறைகளில் இயங்குகின்றனர்.

7. எதிர்ப்பு தெரிவிக்கும் நடிகைகளை மிரட்டி அமைதியாக்கி விடுகின்றனர்.

8. ஆணாதிக்க துறையாக சினிமாதுறை  உள்ளதால் பெண்கள் பலவிதங்களில் பலவீனப்படுத்தப்படுகிறார்கள்.

9. ஒழுக்கமின்மை நிறைந்து சினிமாத்துறை காணப்படுகிறது. பணியிடங்களில்  மது அருந்துவது, போதை பொருள் உட்கொள்வது சகஜமாக உள்ளது.

10. பணியின் போது, நடிகைகளை அநாகரீகமாக போசுவது, போனில் திட்டுவது சகஜமாக நடக்கிறது.

11. பணி கொடுப்பவருக்கும் பணி செய்பவருக்கும் எந்த விதமான ஒப்பந்தமும் முறையாக ஏற்படுத்த முடியாத நிலை  உள்ளது.

12. நடிகைகளுக்கு ஒப்புக் கொண்ட சம்பளத்தை கொடுப்பதில்லை.

13. நடிகர்களுக்கு அதிக சம்பளம், நடிகைகளுக்கு குறைந்த சம்பளம். இது பாலின வேறுபாட்டை  அப்பட்டமாக காட்டுகிறது.

14. தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றும் பெண்களுக்கு எதிர்ப்பு அதிகமாக உள்ளது.

15. எதிர்ப்பு தெரிவிப்பவர்களை சைபர் அட்டாக் செய்வது.

16. பெண்களுக்கு தங்களது உரிமை குறித்த தெளிவான அறிவு இல்லாதது.

17.பெண்களின் குறைகளை தீர்க்க சட்டரீதியிலான எந்த அமைப்பும் இல்லை.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன் 

முதல்வரின் செயலாளர்கள்: எந்தெந்த சாதியினர்?

அட்ஜஸ்ட்மென்டுக்கு ஒப்புக் கொண்ட நடிகைகளுக்கு தனி கோட் வேர்டு… போலீசுக்கு போனால் என்ன நடக்கும் தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel