இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் குறித்த தொகுப்பை இங்கே காணலாம்:
கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை இயக்கிய மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கண்ணை நம்பாதே’. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா நடித்துள்ளார். இவர்களுடன் பிரசன்னா, ஸ்ரீகாந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இந்த படம் நாளை (மார்ச் 17 ) ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
குலேபகாவலி, ஜாக்பாட் உள்ளிட்ட படங்களை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கோஸ்டி.
இந்தப் படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். அவருடன் யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படமும் 17-ம் தேதியான நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பான் இந்தியா படைப்பாக உருவான ’கப்ஜா’வை தமிழில் லைகா நிறுவனம் வெளியிடுகிறது. அண்மையில் வெளியான இதன் ட்ரெய்லர், திரைப்படம் குறித்த எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.
கன்னட நட்சத்திரங்களான உபேந்திரா, கிச்சா சுதீப், ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடித்த ’கப்ஜா’ திரைப்படம் 17-ம் தேதியான நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஈவிகேஸ் இளங்கோவன் உடல்நிலை: மருத்துவர் பேட்டி!
”நாட்டிற்கு எதிராக நான் பேசவில்லை”: ராகுல் காந்தி