நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று(அக்டோபர் 18) சென்னை சாய் ராம் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் பேசிய சிவகார்த்திகேயன், ‘பிரின்ஸ்’ படத்தின் தோல்விக்குப் பிறகு தான் நடிகர் அஜித்குமாரை சந்தித்த போது அவர் தனக்கு கூறிய அட்வைஸை மேடையில் கூறினார்.
விஜய் தனக்களித்த அன்பு, ‘அமரன்’ படம் தனக்கு எந்த வகையில் ஸ்பெஷல், சாய் பல்லவி உடன் சேர்ந்து நடித்தது என பல விஷயங்களை தனக்கே உரிய பாணியில் மேடையில் பேசினார் சிவகார்த்திகேயன்.
அவர் பேசியதாவது, ‘ இரண்டு வருஷத்துக்கு முன்னாடி பிரின்ஸ் படம் வெளியாச்சு. அதுக்கு எதிர்மறையான விமர்சனங்கள் தான் வந்துச்சு. நான் அப்போ இன்னும் பெட்டரான கதையை தேர்ந்தெடுத்திருக்கணும்னு நினைச்சேன். ‘இவன் இதோட அவுட்’ன்னு சொன்னாங்க. அப்போ தான் அஜித் சாரை சந்திச்சேன். அவர், ‘வெல்கம் டு பிக் லீக்’ னு சொன்னார். நம்ம வாழ்க்கைல பிரச்சனைங்கிறது சென்னை மழை மாதிரி. எல்லாத்துக்கும் தயாராக இருக்கும் போது வராது. ஜாலியாக இருக்கும் போது ஒரு காட்டு காட்டி விடும். அந்த சமயத்தில் எதிர் நீச்சல் போட்டு தான் வரணும்’ எனப் பேசினார்.
இதைத் தொடர்ந்து , ‘தளபதி உங்க கையில துப்பாக்கியையும் , வாட்சையும் கொடுத்திருக்கார். எது பிடிச்சிருந்தது?’ என தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு, ‘தளபதி கொடுத்த அன்பு பிடிச்சிருந்தது’ என பதிலளித்தார்.
நடிகர் சிவகார்த்திகேயன் திரைத்துறைக்கு அறிமுகமானது ‘மெரினா’ திரைப்படம் என்றாலும், அவர் அதற்கு முன்னரே அஜித் நடித்த ‘ஏகன்’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்தக் காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை. அந்தப் படப்பிடிப்பில் நடிகர் அஜித் தன்னிடம் பேசிய முதல் வார்த்தை ‘வெல்கம் டூ டி இண்டஸ்ட்ரி’ என சிவகார்த்திகேயன் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஷா
திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றேனா? – தமிழிசைக்கு உதயநிதி பதில்!
என் மகனே மீண்டும் பிறந்திருக்கிறான் – தர்ஷனால் கொல்லப்பட்ட ரேணுகாசாமி தந்தை உருக்கம்!