நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு உதவுவதற்காக கேரள அரசுக்கு விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியினர் நிதியுதவி அளித்துள்ளனர்.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்காக மாநில அரசுகள், அரசியல்வாதிகள், திரை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
தொகை சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை, நிதி அளியுங்கள் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தநிலையில் தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் வயநாடு மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
அவர்கள் இன்று (ஆகஸ்ட் 2) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வயநாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான நிலச்சரிவில் பல குடும்பங்களுக்கும் சமூகங்களுக்கும் ஏற்பட்ட இழப்பு மனதுக்கு மிகவும் வேதனையை தருகிறது.
இந்த இழப்புகள் நெஞ்சைப் பிசைகின்றன. இந்த நேரத்தில், ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க ஒன்றிணைவது அவசியமானது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உடனடி உதவி வழங்கவும், மறுசீரமைப்பு பணிகளுக்காகவும் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 20 லட்சம் வழங்குகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ள்து.
வயநாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் ஒன்றுபட்டு நிற்போம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பில் அவர்களது குழந்தைகளான உயிர் மற்றும் உலக் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
வயநாடு மக்களுக்காக 100 வீடுகளை கட்டித்தருவோம் : ராகுல் உறுதி!
மேகதாது அணை… பேச்சுவார்த்தை நடத்துவது தற்கொலைக்கு சமம் : துரைமுருகன்
Comments are closed.