வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தின் நான்காவது சிங்கிள் பாடலான ‘ மட்ட’ என்கிற பாடல் அப்படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.
விஜய் நடிக்கும் ‘ கோட் ‘ திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இன்று ( ஆகஸ்ட் 31 ) இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘ கோட் ‘ திரைப்படத்தின் நான்காவது சிங்கிள் வெளியிடப்பட்டுள்ளது. ‘ மட்ட ‘ என்கிற இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.
இந்தப் பாடலில் விஜய் நடித்த அனைத்து படங்களின் அவரது மேனரிசங்களும் வருகிறது. நிச்சயம் இந்தப் பாடல் விஜய் ரசிகர்களுக்கு தியேட்டரில் கொண்டாட்டமாக இருக்கும் .
ஏற்கனவே பல பேட்டிகளில் இயக்குநர் வெங்கட் பிரபு, இந்தப் படத்தில் விஜய்யின் திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில் பல்வேறு காட்சிகள் உள்ளது எனத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோட் படத்தில் மோகன், பிரசாந்த், பிரபு தேவா, ஜெயராம், அஜ்மல், சினேகா, மீனாக்ஷி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அண்ணாமலை லண்டன் பயணம்… தமிழகம் அமைதியாக இருக்கிறது… கலாய்த்த ஆர்.பி.உதயகுமார்
கோட் படத்தில் நடிக்க விஜய்க்கு 200 கோடி சம்பளம்… அர்ச்சனா கல்பாத்தி சொல்லும் ரகசியம்!
குடித்து விட்டு அறை கதவை தட்டிய பிரபல தெலுங்கு நடிகர் … கதறிய விசித்ரா! கைவிட்ட சரத்குமார்
”தனபால் முதல்வர் ஆவதை அதிமுக தலித் எம்.எல்.ஏக்களே எதிர்த்தனர்”: திவாகரன்