Vyjayanthi Movies Enters Into Music Business

இசை நிறுவனத்தை தொடங்கும் வைஜெயந்தி மூவிஸ்!

சினிமா

அஸ்வினி தத்தால் 1974ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, பின்னர்  தெலுங்கு சினிமாவில் புகழ்பெற்ற நிறுவனமாக வளர்ச்சி அடைந்தது வைஜெயந்தி மூவிஸ்.

இந்நிறுவனம் தெலுங்கு திரையுலகில் பல வெற்றிகரமான படைப்புகளை வழங்கிய முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும்.  திரைத் துறை சார்ந்த தொழில்துறையில் உள்ள அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் இணைந்து ஒத்துழைத்த தயாரிப்பு நிறுவனம் இது.

இந்நிறுவனம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தற்போது  ‘கல்கி 2898 கி.பி.’ என்ற படத்தை தயாரித்து வருகிறது.  திரைப்பட தயாரிப்பில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் இந்நிறுவனம். அதனை கொண்டாடும் வகையில் புதிதாக ‘வைஜெயந்தி மியூசிக்’ எனும் இசை நிறுவனத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளது.

Vyjayanthi Movies Enters Into Music Business

50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி 2024 ஆம் ஆண்டு இலட்சிய படைப்பின் வெளியீட்டிற்கு முன்னதாக அவர்கள் இந்த வைஜெயந்தி மியூசிக் எனும் இசை நிறுவனம் தொடங்குவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

‘எங்கள் இசையை உங்கள் வாழ்வில் கொண்டு வருவோம்’ என்பதுதான் வைஜெயந்தி மியூசிக் எனும் இசை பிராண்டின் நோக்கம்  என இந்நிறுவனம் பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறது.‌

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இராமானுஜம்

24 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்தை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா

மதுரை வரும் ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்!

மொழிவாரி மாநிலங்களும் அம்பேத்கரின் எச்சரிக்கையும்!

வெற்றிமாறனை இயக்க ஆசை : லோகேஷ் கனகராஜ்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *